For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு.. பிசிசிஐ திட்டம்

மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வரும் 20ஆம் தேதி முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் நடக்கிறது.

வரும் 25ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த தொடரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித்துக்கு ஓய்வு

ரோகித்துக்கு ஓய்வு

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.மேலும் கடும் நெருக்கடிகளை இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் சந்தித்தனர். இதனால் கேப்டன் ரோகித் சர்மா மனதளவில் தோய்வாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கோலி விளையாடுவார்

கோலி விளையாடுவார்

ஏனெனில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்த உடனே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தென்னாப்பிரிக்கா டி20 தொடர் தொடங்குகிறது. இதனால் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.விராட் கோலி தற்போது தான் பார்முக்கு திரும்பி உள்ளார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக ஓய்வின்றி விளையாடுவார் என்று கருதப்படுகிறது.

கேஎல் ராகுலுக்கு நெருக்கடி

கேஎல் ராகுலுக்கு நெருக்கடி

ரோகித் சர்மா இல்லாத நிலையில் கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுவார்.ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ரோகித் சர்மா இல்லாமல் எவ்வாறு இந்திய அணி விளையாடியதோ அதேபோன்ற ஒரு திட்டத்தை தான் ஆஸ்திரேலியக்கு எதிரான டி20 தொடர்களும் பிசிசிஐ செயல்படுத்த உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் கே எல் ராகுல் கண்டிப்பாக தனது திறமையை நிரூபித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

அப்படி கே எல் ராகுல் சொதப்பினால் டி20 உலக கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக அவருடைய இடம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு வழங்கப்பட்டால் ராகுல், கோலி ஜோடி தொடக்க வீரராக களம் இறங்குவார்கள். இதனால் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் என இருவருக்குமே பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும். இதேபோன்று காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகி இருந்த ஹர்சல் பட்டேல் ஆஸ்திரேலிய தொடரில் திரும்புகிறார். முகமது ஷமி போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, September 10, 2022, 19:43 [IST]
Other articles published on Sep 10, 2022
English summary
Rohit sharma might rested for Australia T20I series ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு.. பிசிசிஐ திட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+