Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே தவறால் கலைந்த ரோகித்தின் 16 மாதம் தவம்.. இலங்கைக்கு எதிராக அதிரடி ஆட்டம்..சுப்மான் கில் அசத்தல்

கவுகாத்தி : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் எல்லாம் இந்திய அணி 150 ரன்களை தாண்டியது.

2023ஆம் ஆண்டு புத்தாண்டில் இந்திய அணி தங்களது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினர். இதில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

டாசை இழந்த இந்திய அணி , ஷனகாவால் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இரண்டாவது பந்துவீசும் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.

சுப்மான் கில் அதிரடி

சுப்மான் கில் அதிரடி

இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இந்த சூழ்நிலையில், தான் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஜோடி முதல் முறையாக களமிறங்கினர். இதன் காரணமாக இந்த ஜோடி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இஷான் கிஷன் தொடக்க இடத்திற்கு போட்டி போடுவதால் சுப்மான் கில் தன் திறமையை நிரூபிக்கும் வகையில் அதிரடியை காட்டினார்.

ரோகித் ரன் வேட்டை

ரோகித் ரன் வேட்டை

ஆட்டத்தின் 6.4 வது ஓவரிலேயே இந்திய அணி அரைசதம் கடந்தது. இலங்கை வீரர்கள் எல்பிடபிள்யூ மேற்கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை. முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் பிறகு ரஜித்தா ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரன் குவித்தார்.

100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

இதனைத் தொடர்ந்து ரோகித் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் ரன்களை அடிக்கும் வேகத்தை அதிக படுத்தினார். தொடர்ந்து ரன் குவித்து வந்த இந்த ஜோடி ஆட்டத்தின் 14 புள்ளி 5வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. அபாரமாக விளையாடிய சுப்மான் கில் 60 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

சதத்தை தவறிவிட்டார்

சதத்தை தவறிவிட்டார்

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்களை எடுத்தது. மறுபுறம் ரோகித் சர்மா தனது அதிரடியை தொடர்ந்தார். ரோகித் சர்மா கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் 2021ஆம் ஆண்ட செப்டம்பர் 2ஆம் தேதி இங்கிலாந்தக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார். அதன் பிறகு 16 மாதமாக ரோகித் சதம் அடிக்காத நிலையில், இன்றைய ஆட்டத்தில் நல்ல வாய்ப்பு இருந்தது. எனினும் 67 பந்துளில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். இந்த இன்னிங்சில் 9 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.

Story first published: Tuesday, January 10, 2023, 15:58 [IST]
Other articles published on Jan 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+