Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை.. 37 வயதிலும் தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா.. சரிந்த சுப்மன் கில், விராட் கோலி!

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், இந்திய அணி வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டுமே சாதகமாக அமைந்தது.

3 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 2 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 157 ரன்களை விளாசி அசத்தினார். இதன் பலனாக ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா உச்சத்திற்கு சென்றுள்ளார். இந்த தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறியுள்ளார். 765 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2வது இடத்தில் இருக்கிறார்.

Ind vs SL Rohit Sharma virat Kohli

37 வயதிலும் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2வது இடத்திலும், டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 6வது இடத்தில் ரோஹித் சர்மா இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் 2வது இடத்தில் இருந்து ஒரு இடம் சரிந்த அவர், 3வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4வது இடத்தை தக்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் 16வது இடத்திலும், கேஎல் ராகுல் 21வது இடத்துலும் உள்ளனர். இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.

பவுலிங்கை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மஹாராஜ் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இதன்பின் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 12வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இலங்கை ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் 13 இடங்கள் முன்னேறி 83வது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் 10 இடங்கள் முன்னேறி 87வது இடத்திலும் உள்ளனர்.

இதன்பின் ஜனவரி மாதம் தான் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அதிக மாற்றங்கள் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 14, 2024, 15:00 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+