Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 8வது இடம்... இதுவரை இல்லாத சிறப்பு... ஹிட்மேனின் அதிரடி!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் ஐசிசி தரவரிசை டெஸ்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா இதுவரை இல்லாத வகையில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த போட்டிகளில் அவரின் அதிரடியை அடுத்து இந்த முன்னேற்றம் காணப்படுகிறது.

இதேபோல ஸ்பின்னர் ரவி அஸ்வின் ஐசிசி பௌலர்கள் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரோகித் 8வது இடம்

ரோகித் 8வது இடம்

இந்த தரவரிசை பட்டியலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் துவக்க வீரராக அவரது சிறப்பான முன்னேற்றம் இது. கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளின் துவக்க வீரராக அவர் தனது பயணத்தை துவக்கினார்.

ஒன்றரை வருடங்களில் சிறப்பு

ஒன்றரை வருடங்களில் சிறப்பு

இந்நிலையில் ஏறக்குறைய ஒன்றரை வருடங்களில் அவர் தனது சிறப்பை நிரூபித்துள்ளார். இந்த இரண்டு வருடங்களில் தரவரிசையில் சிறப்பான உயரத்தை எட்டியுள்ள துவக்க வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு அளித்துள்ளார்.

பௌலர்கள் வரிசையில் 3வது இடம்

பௌலர்கள் வரிசையில் 3வது இடம்

இந்நிலையில் கடந்த போட்டிகளில் சிறப்பான பௌலிங்கை போட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஸ்பின்னர் ரவி அஸ்வினும் ஐசிசி டெஸ்ட் பௌலர்கள் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஸ்பின்னர் ரவி அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 28, 2021, 15:12 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+