Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவும் தோனியும் வீரர்களோட குறைகளை கேக்கறதுல சிறப்பானவங்க... ரெய்னா பாராட்டு

டெல்லி: ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக உள்ள ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி இருவரும் தங்களது அணி வீரர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்வார்கள் என்று பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoniயும் Rohitதும் வீரர்களோட குறைகளை கேட்பாங்க : Raina பாராட்டு

சூப்பர் ஓவர் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த எம்எஸ் தோனி ரோகித் சர்மாதான் என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வெற்றிக் கூட்டணியில் ரோகித் சர்மாவின்கீழ் தான் விளையாடியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ரெய்னா, அணியின் ஒவ்வொரு வீரரையும் கேப்டனாக ரோகித் கருதுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

4 ஐபிஎல் கோப்பைகள் வெற்றி

4 ஐபிஎல் கோப்பைகள் வெற்றி

இந்திய அணியில் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டனாக விளங்குகிறார் ரோகித் சர்மா. இந்திய அணியில் இவரது சாதனைகள் அளப்பரியது. இதேபோல ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் ரோகித் சர்மா தன்னுடைய அணிக்கு இதுவரை 4 கோப்பைகளை வெற்றிப்பரிசாக அளித்துள்ளார்.

நிதானத்தை கைவிடாதவர்

நிதானத்தை கைவிடாதவர்

சிறப்பான சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா, எந்த சூழலிலும் தன்னுடைய நிதானத்தை கைவிடாமல் ஆடக்கூடியவர். இதன்மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில், ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி இருவரும் அணி வீரர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர்கள் என்று பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா பாராட்டு

சுரேஷ் ரெய்னா பாராட்டு

இந்திய அணியின் அடுத்த எம்எஸ் தோனி ரோகித் சர்மாதான் என்றும் ரெய்னா புகழ்ந்துள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வெற்றிக் கூட்டணியில் ரோகித் சர்மாவின்கீழ் தான் விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரெய்னா, தன்னுடைய அணியின் ஒவ்வொரு வீரரையும் கேப்டனாக கருதி ரோகித் சர்மா முக்கியத்துவம் தருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னிருந்து வழிநடத்துவார்

முன்னிருந்து வழிநடத்துவார்

தன்னுடைய அணி வீரர்களுக்கு ரோகித் சிறப்பான தன்னம்பிக்கையை தொடர்ந்து அளிப்பார் என்றும் மேலும் அணியை முன்னிருந்து வழிநடத்துவார் என்றும் சுரேஷ் ரெய்னா மேலும் கூறினார். தோனியை காட்டிலும் ஐபிஎல்லில் அதிகமான கோப்பையை ரோகித் வென்றுள்ள போதிலும் இருவரும் ஒரேமாதிரியான திறமைகளை கொண்டவர்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 29, 2020, 16:34 [IST]
Other articles published on Jul 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+