Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இது தான் ரோகித் சர்மா பவர்.. வெறும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வீரருக்கு கிடைத்த கவுரவம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வெறும் இம்பாக்ட் வீரராக பேட்டிங் மட்டுமே செய்த ரோகித் சர்மாவை 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் அணிக்கு கேப்டனாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து தேர்வு செய்து இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. இதில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திருக்கிறது. இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வெறும் இம்பாக்ட் வீரராக மட்டும்தான் ரோஹித் சர்மா களமிறங்கினார்.

Navjot on Rohit sharma

15 இன்னிங்ஸில் அவர் 418 ரன்கள் குவித்து இருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 149 என்று அளவில் இருந்தது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மா 81 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சிறந்த அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சித்து தேர்வு செய்தார்.

இதில் தொடக்க வீரராக நடப்பு சீசனில் மூன்றாவது அதிக ரன்களை குவித்த விராட் கோலியையும், ரோஹித் சர்மாவையும் அவர் தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று மூன்றாவது வீரராக ஜாஸ் பட்லரை தேர்வு செய்துள்ள நவஜோத் சித்து நான்காவது வீரராக அணியில் எடுத்திருக்கின்றார்.
ஐந்தாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன நிக்லோஸ் பூரானை சித்து தேர்வு செய்துள்ளார்.

ஆறாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ள சித்து, ஏழாவது வீரராக ஆர் சி பி அணியின் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். எட்டாவது வீரராக சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய நூர் அகமதுக்கு சித்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஒன்பதாவது வீரராக நடப்பு சீசனில் அதிக ரன்கள் விளாசிய பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்.பத்தாவது வீரராக பும்ராவை தேர்வு செய்துள்ள சித்து, 11-வது வீரராக ஹேசல்வுட்டை தேர்வு செய்து இருக்கின்றார். நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த சாய் சுதர்சனுக்கு சித்து அணியில் இடமில்லை.

Story first published: Sunday, June 8, 2025, 10:11 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+