For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 தொடரில் கோலிக்கு பதில் 3வது இடத்தில் பேட்டிங் செய்யப் போவது சாஹல்!? ரோஹித் சொன்னது என்ன?

Recommended Video

டி20 தொடரில் 3வது இடத்தில் பேட்டிங் செய்யப் போவது சாஹல்?- வீடியோ

வெல்லிங்டன் : இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் ஆட உள்ளது.

இதற்கான டி20 அணியில் சுழற் பந்துவீச்சாளர் சாஹல்-ஐ மூன்றாம் இடத்தில் பேட்டிங் ஆட வைக்க முயற்சிப்பதாக ரோஹித் சர்மா கூறினார். இதை அவர் வேடிக்கையாக தான் கூறினார் என்றாலும் ஏன் இப்படி கூறினார்?

ரோஹித் கேப்டன்

ரோஹித் கேப்டன்

இந்திய அணியின் கேப்டனாக நியூசிலாந்து ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளில் செயல்பட்டார் ரோஹித் சர்மா. அடுத்து டி20 தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார். அவர் சாஹல் பேட்டிங் செய்யும் இடம் குறித்து பேசினார்.

சாஹல் டிவிக்கு அளித்த பேட்டி

சாஹல் டிவிக்கு அளித்த பேட்டி

இந்நிலையில், நியூசிலாந்து ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின் முடிவில் சாஹல் தான் சாஹல் டிவி என்ற பெயரில் எடுத்து வரும் வேடிக்கை பேட்டிக்காக ரோஹித் சர்மாவை அணுகினார்.

அதிக ரன் எடுத்த சாஹல்

அதிக ரன் எடுத்த சாஹல்

நான்காவது போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் சாஹல் 18 ரன்கள் அடித்து இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயரைப் பெற்றார். அதற்காக, டி20 தொடரில் கோலி இல்லாததால் அந்த இடத்தில் தான் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என சாஹல் ரோஹித்திடம் கேட்டார்.

டி20 தொடரில் வாய்ப்பு

டி20 தொடரில் வாய்ப்பு

இதற்கு பதில் அளித்த கேப்டன் ரோஹித் சர்மா, சாஹல் இந்தியா தோற்ற போட்டியில் அதிக ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் இந்தியா வென்ற போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருக்க வேண்டும். நான் ரவி சாஸ்திரியிடம் பேசி டி20 தொடரில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறேன்" என விளையாட்டாக கூறினார்.

டி20 தொடர் எப்போது ஆரம்பம்?

டி20 தொடர் எப்போது ஆரம்பம்?

நியூசிலாந்து அண்மிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றிய அணி அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 6 முதல் தொடங்க உள்ளது.

Story first published: Monday, February 4, 2019, 18:55 [IST]
Other articles published on Feb 4, 2019
English summary
Rohit Sharma named Chahal to bat at no.3 in T20 series. Do you know the reason?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+