Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் ஒரு சதம் தான் தேவை.. விவரம்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா ஒரு சதம் விளாசினால் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணி அடுத்த இரண்டு மாதங்களில் தனது சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நவம்பர் மாதம் விளையாடுகிறது.

india vs bangladesh ind vs ban rohit sharma

இதனால் ரோகித் சர்மா வாழ்க்கையில் இந்த போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன் காரணமாக ரோகித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விராட் கோலி தற்போது எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாமல் இங்கிலாந்தில் தன்னுடைய மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ஆனால் ரோகித் சர்மா தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்துவதற்காகவும், தொடர்ந்து உழைத்து வருகிறார். அது மட்டுமில்லாமல் மும்பையில் உள்ள மைதானங்களில் சென்று ரோகித் சர்மா தனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் கேப்டன் ஆகவும் அணியின் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஒரு சதம் விளாசினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 10 டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். தற்போது பத்து சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சன், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதனால் இந்த பட்டியலில் ரோகித் சர்மா சேர வேண்டும் என்றால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஒரு சதம் அடிக்க வேண்டும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஜோ ரூட் 16 சதங்களுடன் முதலிடத்திலும் மார்னஸ் லாபஸ்சென் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் கேன் வில்லியம்சன் 10 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஸ்மித், ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒன்பது சதங்களுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் விராட் கோலி மற்றும் மாயங் அகர்வால் ஆகியோர் தலா ஐந்து சதங்கள் அடித்து ரோஹித்துக்கு பின்னால் இருக்கிறார்கள். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரிலும் தொடங்குகிறது.

Story first published: Sunday, September 8, 2024, 8:53 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+