பாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா
ஐதராபாத் : சர்வதேச போட்டிகளில் 399 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில் மேலும் ஒரு சிக்சர் அடித்து 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா நாளைய போட்டிக்காக காத்திருக்கிறார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆகியோர் 400 சிக்சர்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனை பட்டியலில் இருக்க ஒரேயொரு சிக்சர் அடிப்பதன்மூலம் இந்த குழுவில் சேரவுள்ளார் ரோஹித் சர்மா.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா நாளை ஐதராபாத்தில் மோதவுள்ள சர்வதேச டி20 போட்டியின் முதல்நாள் போட்டியிலேயே இந்த சாதனையை ரோஹித் சர்மா மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

323 ஒருநாள் சர்வதேச போட்டிகள்
சர்வதேச போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் சர்மா, இதுவரை 323 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 52 டெஸ்ட்கள் மற்றும் 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒரு சிக்சர் அடித்தால் சாதனை
சர்வதேச போட்டிகளில் இதுவரை 399 சிக்சர்களை விளாசி தள்ளியுள்ள ரோஹித் சர்மா, ஒரேயொரு சிக்ஸ் அடித்தால், 400 சிக்சர்கள் அடித்த குழுவினருடன் சேர்ந்து விடலாம். அதற்காக அவருக்கு தேவை என்னவோ ஒரேயொரு சிக்ஸ்தான்.

ஒரு சிக்ஸ்க்காக காத்திருப்பு
மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ஆகியோர் முறையே, 534 சிக்ஸ்கள் மற்றும் 476 சிக்ஸ்களை அடித்து இந்த சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான நாளைய போட்டியில் ஒரு சிக்ஸ் அடிப்பதற்காக காத்திருக்கிறார் ரோஹித் சர்மா.

அதிக சிக்ஸ்கள் அடித்த வீரர்
சர்வதேச அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக சிக்ஸ்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை 67 சிக்ஸ்களை அடித்துள்ள அவர், கடந்த 2017ல் 65 சிக்ஸ்களும் 2018ல் 74 சிக்ஸ்களும் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications