Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரியுடன் கைகோர்க்கும் ரோகித் சர்மா? புதிய லூக்குடன் லண்டனில் தங்கிய ஹிட்மேன்

மும்பை: இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா புத்தம் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் வெள்ளைப்பந்து தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தது. ஒருநாள் தொடர் முடிந்த பின்னரும் ரோஹித் சர்மா லண்டனிலேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, லண்டன் வீதிகளில் ரோஹித் சர்மாவை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் ரோஹித் clean-shave முகத்துடன், மிகவும் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

Rohit sharma

ரவி சாஸ்திரி ரோஹித்தின் தோளில் கை போட்டபடி, மற்றொரு கையால் அவரை சைகை காட்டி புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். "லண்டன் வீதிகளில் நிதானமாக உலா வந்த ஷர்மாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அந்தப் பதிவிற்கு ரவி சாஸ்திரி போட்டுள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடும் போது, ரோஹித் சர்மா மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார். இங்கிலாந்து தொடரின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

இதனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 125.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 138 ரன்கள் குவித்து அசத்தினார். ரோகித் சர்மா மீது நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியுடன் ரோஹித் சர்மா கைகோர்க்க போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

Story first published: Friday, July 31, 2026, 15:27 [IST]
Other articles published on Jul 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+