Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகலா??.. கடைசி நேரத்தில் விமானம் ஏறவில்லை.. காரணம் என்ன??

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நீண்ட தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி கடந்தாண்டு முடிவு எட்டப்படாமல் ரத்தான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடர் 2 - 1 என இந்தியாவின் பக்கம் சாதகமாக உள்ளது. அதனை தொடர்ந்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி புறப்பாடு

இந்திய அணி புறப்பாடு

இந்த தொடருக்காக ஓய்வில் இருந்த முன்னணி வீரர்கள் அனைவரும் இன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமா விஹாரி, கேஎஸ் பரத் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்தனர்.

 போகாத ரோகித் சர்மா

போகாத ரோகித் சர்மா

இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் இங்கிலாந்து செல்லவில்லை. இதுதான் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அயல்நாட்டு தொடர்களில் ரோகித் பெரும்பாலும் காயம் எனக்கூறி கலந்துக்கொள்ள மாட்டார் என்ற விமர்சனம் உள்ளது. அதற்கேற்றார் போன்றே தற்போது இங்கிலாந்துக்கு செல்லவில்லை. இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறுகிறாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் அவர் நிச்சயம் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருந்த ரோகித் சர்மாவுக்கு, தனிப்பட்ட குடும்ப பணிகள் இருப்பதால் அவர் கடைசி நேரத்தில் விமான நிலையத்திற்கு வரவில்லை என்றும் நாளை ( ஜூன் 17ம் தேதிக்குள் ) அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டு விடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோ பபுள் பிரச்சினை

பயோ பபுள் பிரச்சினை

இங்கிலாந்து தொடரில் எந்தவொரு பயோ பபுள், கொரோனா விதிமுறைகளும் இல்லை. விமானம் ஏறுவதற்கு முன்பாக வழக்கமான கொரோனா பரிசோதனை மட்டுமே செய்யப்படும். எனவே இந்திய வீரர்கள் தனி விமானத்தில் வராமல், பயணிகள் விமானத்திலேயே இங்கிலாந்து சென்று வருகின்றனர்.

Story first published: Friday, June 17, 2022, 1:07 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+