பிரிட்ஜ் டவுன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி 114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது.
இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்தாலும் 22.5 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயாமாக ஆடுகளம் இப்படி செயல்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அணி நிர்வாகம் தான் முதலில் நாம் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஆடுகளம் ஆட்டம் செல்ல செல்ல மோசமாக மாறியது.முதலில் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே சாதகமாக தான் இருந்தது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் தற்போது திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம். ஆனால் மீண்டும் நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை இழப்போம் என்று நினைக்கவே இல்லை. எனினும் மற்ற வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைத்தோம். குறிப்பாக சில வீரர்கள் நான்கு வாரத்திற்கு மேல் விளையாடாமல் இருந்தார்கள்.நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன்.
அதன் பிறகு இப்போது தான் அந்த இடத்தில் விளையாடினேன். முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம் தான் என்று ரோகித் கூறினார்.