Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. என்ன பண்றது.. நீலிக்கண்ணீர் வடிக்கும் ரோகித் சர்மா

Recommended Video

IPL 2019: Malinga No ball | பொங்கிய கோஹ்லி.. வருத்தம் தெரிவித்த ரோஹித்- வீடியோ

பெங்களூரு:மலிங்கா நோபால் வீசியதை பார்க்கும் போது கஷ்டமாக இருப்பதாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி, சீரான இடை வேளையில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதிகட்ட பரபரப்பில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 187 ரன்கள் எடுத்தது.

188 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தனர். அதன் விளைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 70 ரன்களும், கோலி 46 ரன்களும் எடுத்தனர்.

த்ரில் ஓவர்

த்ரில் ஓவர்

கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில், பெங்களூரு அணி 13 ரன்களை மட்டும் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி

வெற்றி

ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்தை டுபே எதிர்கொண்டார். அதில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ரீப்ளேவில் நோபால்

ரீப்ளேவில் நோபால்

ஆனால் அந்த கடைசி பந்தை ரீப்ளேவில் பார்த்த போது விஷயமே வேற மாறி இருந்தது. மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி அம்பயர்களிடம் கேட்டார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அப்போது, போட்டி முடிவை மாற்ற முடியாது என்று அம்பயர்கள் தெரிவித்ததால், கோலி கடுப்பானார். கடுமையாக அவர்களை விமர்சித்தார். இந்நிலையில் பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, கடைசி பந்து நோ பால் என்பதை கவனிக்காதது வேதனையாக உள்ளதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

யாரும் கூறவில்லை

யாரும் கூறவில்லை

இது குறித்து அவர் பேசியதாவது: என்னிடமும் யாரும் வந்து அது நோபால் என்று கூறவில்லை. நாங்களும் அதை கவனிக்கவில்லை. மைதானத்தை விட்டு வெளியில் இருப்பவர்களால் அனைத்தையும் டிவி மூலம் பார்க்க முடியும்.

நல்லது அல்ல

நல்லது அல்ல

ஆனால் எங்களால் அது முடியாது. நாங்கள் எதையும் வேண்டுமென்றே செய்ய வில்லை. இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இது போன்ற செயல்கள் விளையாட்டிற்கும் நல்லது அல்ல.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

அது ஆட்டத்தின் கடைசி பந்து என்பதால் பெங்களூர் அணி வீரர்களுடன் , நாங்கள் கை கொடுத்துவிட்டு செல்வதை விட வேறு வழி இல்லை. பும்ரா, மலிங்கா உள்பட அனைத்து வீரர்களும் சிறந்த முறையில் விளையாடினர் என்று கூறினார்.

Story first published: Friday, March 29, 2019, 12:30 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+