உலக சாதனை படைக்கப் போகும் ரோகித்..!! இன்னும் 44 ரன்களே தேவை..ஒயிட்வாஷ்க்கு தயாராகும் இந்தியா !
கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் உள்ளது.
நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லவில்லை. இதனால் ஆறுதல் வெற்றிக்காக பொலார்ட் தலைமையிலான அணி போராடும்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இன்றைய போட்டியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஸ்ரேயாஸ் ஐயர் தனது புதிய ஐபிஎல் அணியின் மைதானத்தில் களம் காண்கிறார்.

பந்துவீச்சாளர்கள் மாற்றம்
பந்துவீச்சிலும் இந்திய அணி பல மாற்றத்தை கொண்டு வர உள்ளது. முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே போன்று சுழற்பந்துவீச்சிலும் சாஹலுக்கு பதிலாக குல்தீப் களமிறங்கலாம்

தொடக்க வீரர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த போட்டியில் வெற்றியின் அருகில் வந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் தொடக்க ஜோடி வேகமாக ரன் குவிக்க தவறுவது தான் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பொலார்ட் மூன்றாவது வீரராக களமிறங்கி, ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தினர்.

ரோகித் சாதனை
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 44 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார். தற்போது குப்தில் 3299 ரன்களுடனும் முதலிடத்திலும், விராட் கோலி 3296 ரன்களுடனும் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 3256 ரன்களுடனும் உள்ளனர். இன்றைய ஆட்டத்திலாவது இஷான் கிஷன் ஃபார்ம்க்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications