Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் தொடக்க வீரராக கோலி.. அப்போது ராகுல் கதி.. ரோகித் சர்மா வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் செவ்வாய்க்கிழமை மொஹாலியில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்கினர்.

Recommended Video

T20 World Cup அணியில் இடம் இல்லை! Sanju Samson ரசிகர்களுக்கு அறிவுரை Cricket

பயிற்சி தொடங்குவதற்கு முன்பு கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார் அதனை தற்போது காணலாம்.

முகமது ஷமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மாற்று வீரர்கள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தோம்.அப்போது பிரசித் கிருஷ்ணா கிருஷ்ணா காயம் அடைந்திருக்கிறார்.

சீனியர்கள் ஏன்?

சீனியர்கள் ஏன்?

சிராஜ் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். வெறும் இரண்டு போட்டிக்காக அவரை நாட்டுக்கு அழைக்க விரும்பவில்லை. ஆவேஷ் கான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவர் உடல் தகுதி பெற சிறிது காலம் ஆகும். உமேஷ் யாதவ், முகமது ஷமி எல்லாம் ஏற்கனவே தங்களது திறமையை நிரூபித்தவர்கள். இளம் வீரர்கள் தான் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் சீனியர்கள் அல்ல. சீனியர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

உமேஷ் தேர்வு ஏன்?

உமேஷ் தேர்வு ஏன்?

நாங்கள் பார்மை பார்ப்பதில்லை. உமேஷ் யாதவ் ஐபிஎல் தொடரில் எப்படி சிறப்பாக பந்து வீசினார் என்று நம் அனைவரும் கண்டோம். புது பந்தில் உமேஷ் யாதவ் நன்றாக ஸ்விங் செய்வார், வேகமாக வீசுவார். இதனால் தான் அவரை அணியில் சேர்த்தோம்.ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடன் விளையாடுவது மிகவும் முக்கியம்.அப்போதுதான் வீரர்கள் கடினமான சூழலில் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும்.எங்களை நாங்கள் சிறந்த அணி என்று கூறவில்லை.

சவாலான தொடர்

சவாலான தொடர்

நாங்கள் தினந்தோறும் கற்று வருகிறோம். முன்னேற்றம் கண்டு வருகிறோம். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டுமே சவாலான அணிகள் என்பதால் நிச்சயம் இந்த அனுபவம் கை கொடுக்கும். எங்களுக்கு 10 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் விழுதால் எப்படி விளையாட வேண்டும் என்றும் தெரியும். 50 ரன்களுக்கு விக்கெட் விழாமல் இருந்தால் எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்றும் தெரியும். எங்களுடைய புதிய அணுகுமுறை எங்களுக்கு உதவி செய்திருக்கிறது.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அவர் ஆட்டத்தை கண்டு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் உலககோப்பை போட்டிக்கு மூன்றாவது தொடக்க வீரரை அழைத்துச் செல்லவில்லை. அதற்கு காரணம் விராட் கோலி எங்களுக்கு அந்த ஒரு வாய்ப்பை கொடுப்பார். தேவை ஏற்பட்டால் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார். ஆனால் இப்போதைக்கு கே எல் ராகுல் தான் எங்கள் அணியின் தொடக்க வீரர். டாப் ஆர்டரிலில் அவருடைய இருப்பு அணி மிகவும் முக்கியம். கே எல் ராகுலின் பல ஆட்டங்கள் ரசிகர்களால் கவனிக்காமல் போய்விடுகிறது என்று ரோகித் கூறினார்.

Story first published: Sunday, September 18, 2022, 18:11 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+