Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பையில் உம்ரான் மாலிக் நிலை.. முக்கிய அப்டேட் கொடுத்த ரோகித் சர்மா.. ஆனால் ஒரு கண்டிஷன்

சவுத்தாம்டன்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்காக தயாராகி வருகிறது.

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக தான் பல்வேறு போட்டிகளில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

டி20 உலகக்கோப்பை ரேஸ்

டி20 உலகக்கோப்பை ரேஸ்

உலகக்கோப்பை அணிக்காக பல்வேறு வீரர்களை மனதில் வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு அணி என்ற முறையில் இந்தியா விளையாடி வருகிறது. இதனால் யாருக்கெல்லாம் வாய்ப்பு என புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ரோகித் பதில்

ரோகித் பதில்

இந்நிலையில் தான் இளம் வீரர் உம்ரான் மாலிக், உலகக்கோப்பை திட்டத்தில் இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உம்ரான் மாலிக் தற்போது தான் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வெவ்வேறு அணியை எதிர்த்து விளையாட வேண்டிய அனுபவம் தேவைப்படுகிறது.

திட்டத்தில் இருக்கிறார்

திட்டத்தில் இருக்கிறார்

எனவே அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாடிய பின்பு தான் இந்திய தேர்வுக்குழு அவரை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கும். எனினும் என்னப்பொறுத்தவரையில் அவர் எங்களது திட்டத்தில் ஒரு பவுலராக இருக்கிறார். இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்துக்கொண்டு தயாராக இருந்தால் போதும்.

அதுமட்டும் செய்யனும்

அதுமட்டும் செய்யனும்

அதிவேகமாக பந்துவீசுவது மட்டும் தான் உம்ரானின் பணியாக இருக்கிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் வேகத்தோடு சேர்த்து போட்டி சூழலுக்கும் ஏற்றார் போன்று செயல்பட வேண்டும். இதனை புரிந்துக்கொண்டு தயாராகிவிட்டால், வாய்ப்புகள் உண்டு என ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Story first published: Thursday, July 7, 2022, 21:47 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+