For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹனுமா விஹாரியுடன் போட்டி போடும் ரோஹித் சர்மா.. டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா?

Recommended Video

ஹனுமா விஹாரியுடன் போட்டி போடும் ரோஹித் சர்மா- வீடியோ

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியில் ஆடுவாரா? இல்லையா? என்பது பெரிய விவாதமாக மாறி உள்ளது.

துவக்க வீரர் அல்லது ஆறாவது பேட்டிங் இடத்தில் ரோஹித் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், துவக்க இடத்திற்கு ராகுல் - முரளி விஜய்யும், ஆறாவது பேட்டிங் இடத்திற்கு ஹனுமா விஹாரியும் ரோஹித்துக்கு போட்டியாக இருக்கின்றனர்.

மும்பை சிட்டி அணி அபார வெற்றி!! முதல் வெற்றி கிடைக்காத சோகத்தில் டெல்லி டைனமோஸ் மும்பை சிட்டி அணி அபார வெற்றி!! முதல் வெற்றி கிடைக்காத சோகத்தில் டெல்லி டைனமோஸ்

வாய்ப்பு பெறாத ரோஹித் சர்மா

வாய்ப்பு பெறாத ரோஹித் சர்மா

கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு பெறாத ரோஹித் சர்மா, கடைசியாக இந்த ஆண்டு துவக்கத்தில் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதில் இரண்டு போட்டிகள் மட்டுமே ஆடிய அவர் சரியாக ஆடாத காரணத்தால் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.

களம் இறங்கும் வாய்ப்பு

களம் இறங்கும் வாய்ப்பு

எனினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உச்சத்தில் இருக்கும் அவரை டெஸ்ட் அணியில் சேர்த்தே ஆக வேண்டும் என வந்த அழுத்தத்தை அடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கும் ரோஹித், ஆடும் பதினோரு வீரர்களில் வாய்ப்பு பெறுவாரா? என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

ரோஹித் துவக்க வீரரா?

ரோஹித் துவக்க வீரரா?

துவக்க வீரர் இடத்திற்கு முரளி விஜய் உறுதி ஆகியுள்ளார். பயிற்சிப் போட்டியில் சதம் அடித்தார் அவர். ராகுல் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளில் மிக சில போட்டிகளில் மட்டுமே ரன் குவித்துள்ளார். ராகுல் நம்பகமான வீரராக இல்லை. இந்த நிலையில், அவரது துவக்க வீரர் வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

ரோஹித் சர்மாவா? ஹனுமா விஹாரியா?

ரோஹித் சர்மாவா? ஹனுமா விஹாரியா?

ஆனால், ரோஹித் சர்மாவை மிடில்-ஆர்டரில் களம் இறக்க முடிவு செய்தால், ஹனுமா விஹாரிக்கும், ரோஹித்துக்கும் இடையே போட்டி ஏற்படும். இருவருக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்று தான். ஹனுமா விஹாரி பேட்டிங்கோடு சேர்த்து பகுதி நேர பந்துவீச்சாளராக செயல்படுவார். ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமே இருப்பார். (ரோஹித் சர்மா தன் துவக்க காலத்தில் பகுதி நேர பந்துவீச்சாளராக செயல்பட்டார். எனினும், கடந்த சில வருடங்களில் பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்).

பயிற்சிப் போட்டியில் அரைசதம்

பயிற்சிப் போட்டியில் அரைசதம்

சில நாட்கள் முன்பு நடந்த பயிற்சிப் போட்டியில் ஹனுமா அரைசதம் அடித்தார். ரோஹித் 55 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இது பெரிய வித்தியாசம் இல்லை தான் என்றாலும் ஹனுமா விஹாரியின் பந்துவீச்சு திறனோடு பார்த்தால் அவரை உயர்த்திக் காட்டுகிறது. அதே சமயம், ரோஹித்தின் சர்வதேச அனுபவத்துக்கு முன் ஹனுமா விஹாரி நிற்க முடியாது என்பது மற்றொரு ஒப்பீடாக இருக்கிறது. இது கோலிக்கு அணித் தேர்வில் தலைவலியை ஏற்படுத்தலாம்.

வாய்ப்பு உறுதி?

வாய்ப்பு உறுதி?

நேற்று சிறப்பு பயிற்சியில் ரோஹித் மற்றும் அஸ்வின் ஈடுபட்டனர். இதில் ஹனுமா விஹாரி, ராகுல் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்தே துவக்கம் அல்லது ஆறாவது இடம் என ஏதோ ஒன்றில் ரோஹித் சர்மா நிச்சயம் களம் இறங்குவார் என்பது உறுதியாகி விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

Story first published: Tuesday, December 4, 2018, 11:54 [IST]
Other articles published on Dec 4, 2018
English summary
Who will get chance in the first test against australia, Rohit sharma or Hanuma Vihari?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X