இந்த 4 பேரு தான் ரோகித் சர்மாவின் ஆதரவாளர்கள்… காட்டிக் கொடுத்த அந்த போட்டோ..! வெடித்த சர்ச்சை
Recommended Video
புளோரிடா: புவனேஷ்வர்குமார், தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் ஆகியோர் ஹிட் மேன் ரோகித்தின் ஆதரவாளர்கள் என்ற சர்ச்சை இந்திய அணியை பிடித்து ஆட்டி வருகிறது.
உலக கோப்பை போட்டிக்கு பின், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் 3 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்குள் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், அதன் காரணமாக, இருவரின் ஆதரவாளர்களும் அணிகளாக பிரிந்துள்ளனர் என்றும் சர்ச்சைகள் எழத் தொடங்கின.
அது தொடர்பாக புதிது புதிதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடை பெற உள்ளது.

புளோரிடாவில் போட்டிகள்
முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்திய அணியினர் புளோரிடாவின் மியாமி நகருக்கு சென்றடைந்தனர்.

ரோகித் இல்லாத போட்டோ
இந் நிலையில் அமெரிக்கா செல்லும் முன்பு கோலி எடுத்த புகைப்படத்தில் ரோகித் சர்மா போட்டோ இடம்பெறவில்லை. அதனால் அந்த போட்டோ இணையத்தில் ஏகத்துக்கும் வைரலானது. இருவருக்கும் பிரச்னை இன்னும் நீடிக்கிறது என்று நெட்டிசன்கள் உள்ளே புகுந்து கதற ஆரம்பித்தனர்.

பன்ட் வெளியிட்ட போட்டோ
இப்போது மற்றொரு போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டு இணைய வாசிகள் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். மியாமி நகரில் இந்திய அணி வீரர்கள் வெளியே சுற்றி திரிந்தபோது இளம் வீரரான ரிஷப் பன்ட் ஒரு போட்டோவை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கோலி எங்கே?
அதில் இந்திய அணியின் வீரர்களான புவனேஷ்வர்குமார், தவான், ரோகித், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் ஆகியோர் உள்ளனர். அந்த போட்டோ பதிவிடப்பட்ட உடனே இணையத்தில் ஹிட்டித்துள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் எங்கே கோலி என்று கமெண்ட் செய்தனர்.

ரோகித் ஆதரவாளர்கள்
மேலும் ரோகித்தின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் இவர்கள்தான் என்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இந்த போட்டோ சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கருத்து
அணியில் ஏற்கனவே பிளவு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது, ரோகித் இருக்கும் இந்த போட்டோ பிளவை வெளிக்காட்டும் விதமாக உள்ளது என்றும் கருத்துகளை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications