Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை.. இந்திய அணிக்கு எப்போது திரும்ப வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் முடிவடைந்த பிறகு ரோகித் சர்மா அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை டி20 போட்டிகளில் இருந்து அறிவித்தார்.

அதன் பிறகு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக ரோகித் சர்மா விளங்கினார். இந்த தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு இழந்தது.

Rohit sharma

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக வெறும் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் இனி ரோகித் சர்மா விளையாடுவார் என தெரிகிறது. இந்திய அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த அளவு தான் விளையாடுகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், அதனை தள்ளிப் போட்டுக் கொண்டே ரோகித் சர்மா இருந்திருக்கிறார். இந்த காயம் காரணமாக தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவால் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வெறும் ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவதால் ரோஹித் சர்மா அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள முடிவெடுத்தாக தெரிகிறது.

இதனால் ஐபிஎல் தொடர் முடிவு அடைந்த பிறகு ரோகித் சர்மா இந்த அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடப் போகிறார். 2016 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட ரோகித் சர்மா, மூன்று மாதம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

தற்போது இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆனால் இருநாட்டுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்துள்ளது. இதேபோன்று ஆசிய கோப்பை போட்டிகளும் நடைபெறாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் இந்திய அணி வருமாறு ஆஸ்திரேலியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக ரோகித் சர்மா உடல் தகுதியை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 21, 2025, 17:27 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+