Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா பிளான் சரியா? 3 நாளில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகள்.. தவறான பாதையில் இந்தியா

இந்தூர் : இந்தியாவில் ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் அது டிராவாக தான் முடிவடையும். ஏதேனும் ஒரு இரண்டு போட்டிகளில் மட்டுமே முடிவுகள் தெரிய வரும்.

உதாரணத்திற்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றால் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தான் தொடர் முடிவடையும். காரணம் மேலும் ஐந்து நாட்கள் எங்களுக்கு போதாது என்று அளவிற்கு வீரர்கள் இரு அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

அதுவும் ஆடுகளும் சவாலாக இருந்தால் பேட்ஸ்மேன்கள் நங்கூரம் போட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு போட்டிகள் ஒரு காலத்தில் இருந்தது.

ரோகித் கருத்து

ரோகித் கருத்து

தற்போது டி20 யின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி விரைவில் ஆட்டம் இழந்து விடுகிறார்கள். இதனை அஸ்வினை தனது பேட்டியில் கூறி இருக்கிறார். தற்போது தோல்விக்கு காரணம் குறித்து பேசி உள்ள ரோகித் சர்மாவும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாகவும் தைரியமாகவும் விளையாட வேண்டும் என கூறியிருக்கிறார். இது இந்திய அணிக்கு நல்லதா கெட்டதா என்பதை தற்போது பார்ப்போம்.

விக்கெட் போய்விடும்

விக்கெட் போய்விடும்

இந்திய அணி நெருக்கடியான கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் ரோகித் சர்மா அதிரடியாக ஆடும் படி புஜாராவுக்கு செய்தி அனுப்பினார். அதன்பிறகு அதிரடியாக ஆட முடிகின்ற புஜாரா தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆட முயற்சித்து 26 ரன்களில் வெளியேறினார்.இது குறித்து பேசிய ரோஹித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயர் போல் வீரர்கள் தைரியமாக விளையாட வேண்டும் என கூறி இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் மகிமை

டெஸ்ட் கிரிக்கெட் மகிமை

இது முற்றிலும் தவறான கருத்தாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் அடி நாதமே எதிரணியினரின் பொறுமையை சோதிப்பது தான். நங்கூரம் போட்டு பேட்ஸ்மேன்கள் நிற்கும்போது அவர்களை ஆட்டமிழக்க பவுலர்கள் போராடுவதும் மறுபுறம் நெருக்கடி தரும் பவுலர்களை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் யுத்திகளை அமைத்து விளையாடுவதும் தான்.

இதனால் தான் 141 ஆண்டு காலத்தைத் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் விளையாட பட வருகிறது.

எது சரி?

எது சரி?

தற்போது அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விளையாடினால் அது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நாமே விக்கெட்டுகளை பரிசாக கொடுப்பது போல் ஆகும். ஆஸ்திரேலியா டெல்லி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இந்த தவறை தான் செய்தது. அதனை திருத்திக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இம்முறை பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆடுகளம் சிரமமாக இருக்கும் போது தற்காப்பு ஆட்டத்தை நம்பி களத்தில் நின்று ரன்கள் சேர்க்க வேண்டும்.பேட்டிங்கிற்கு கடினமான ஆடுகளத்தில் அதிரடியாக ஆடினால் வரவேண்டிய ஸ்கோர் கூட போய்விடும்.

கை கொடுக்குமா?

கை கொடுக்குமா?

இந்த தவறை தான் இந்திய அணி தற்போது செய்ய தொடங்கியுள்ளது.

எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக ஆடுங்கள் என்று கூறினால் வருங்காலத்தில் புஜாரா போன்ற வீரர்கள் நமக்கு கிடைக்க மாட்டார்கள். அதிரடியாக ஆடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக எல்லா பந்தையும் அடித்து ஆடுவேன் என நினைத்தால் உங்களால் 20 ரன்களை கூட தாண்ட முடியாது. அதுவே பொறுமையையும் அதிரடியும் கலந்து ஆடி இருந்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டிருக்க முடியும். இந்தியாவின் இந்த ஃபார்முலா நிச்சயம் கை கொடுக்காது என்பதே பல விமர்சகர்களின் கருத்தாகும்.

Story first published: Friday, March 3, 2023, 18:54 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+