Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா : தோனி இருந்தால் கேப்டனுக்கு உதவியாக இருக்கும்.. இதை கோலி ஒப்புக் கொள்வாரா?

Recommended Video

தோனி இருந்தால் கேப்டனுக்கு உதவியாக இருக்கும்:ரோஹித் சர்மா- வீடியோ

சிட்னி : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க தோனி, ரோஹித் சர்மா, தவான் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரோஹித் சர்மா தோனி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். தோனி அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி பேசினார் ரோஹித்.

தோனி இருந்தால்.. அமைதி

தோனி இருந்தால்.. அமைதி

ரோஹித் கூறுகையில், தோனி இருந்தாலே அணியில் ஒரு வித அமைதி நிலவும். கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார். மேலும், பேட்டிங் ஆர்டரில் கீழே சென்று ஆடுவதோடு, சரியாக ஃபினிஷிங் செய்வார் எனவும் கூறி புகழ்ந்தார் ரோஹித் சர்மா.

விட்டுக் கொடுக்காமல் பேசினார்

விட்டுக் கொடுக்காமல் பேசினார்

தோனி கடந்த ஆண்டில் பேட்டிங்கில் சரியாக ஆடவில்லை. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் ரோஹித் சர்மா. மேலும், தோனி தான் எங்களுக்கு வழி காட்டும் விளக்கு எனக் கூறினார் ரோஹித். ஆனால், இதை கோலி ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

ரோஹித் வழி

ரோஹித் வழி

ரோஹித் எப்போதுமே தோனியின் வழியில் தான் பயணிக்கிறார். அதை பல முறை வெளிப்படையாகவும், செயலிலும் காட்டி உள்ளார். ஆனால், கோலி தோனி போட்டிகளின் போது கூறும் யோசனைகளை ஏற்றுக் கொள்வாரே தவிர அவர் வழியில் செல்வதில்லை.

கோலி முதிர்ச்சி அடையவில்லை

கோலி முதிர்ச்சி அடையவில்லை

கோலி கேப்டன் பொறுப்பில் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்ற புகார் இருக்கும் நிலையில், தோனியின் உதவி கோலிக்கு நிச்சயம் பயன்படும். அதை தான் ரோஹித் சர்மா தோனியை புகழ்வதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.

பேட்டிங் பார்மை மீட்பாரா?

பேட்டிங் பார்மை மீட்பாரா?

தோனிக்கு உலகக்கோப்பை தொடர் தான் கடைசி தொடர் என கூறப்படும் நிலையில், தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவர் தன் இழந்த பேட்டிங் பார்மை மீட்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தீவிர பயிற்சி

தோனி தன் பேட்டிங் பார்மை மட்டும் மீட்டு விட்டால் உலகக்கோப்பையின் முக்கிய வீரராக மாறி விடுவார். அதற்காக தீவிர பயிற்சியில் இருக்கும் தோனி, தற்போது சிட்னியில் மழை பெய்வதால், அரங்கத்துக்குள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 2018 தான் மோசமாக அமைந்தது. இந்த புது வருடத்திலாவது தோனி அதிரடி காட்ட மாட்டாரா என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, January 10, 2019, 17:47 [IST]
Other articles published on Jan 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+