Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாரா, ரஹானே எதிர்காலம் என்ன? தொடக்க வீரர் யார்? சவாலான பயணம் காத்திருக்கிறது - ரோகித் ஓபன் டாக்

மொஹாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது.

2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

ரோகித் சர்மா முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியை ஏற்கிறார். இது தொடர்பாக காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை ரோகித் சர்மா சந்தித்தார்.

டெஸ்ட் கேப்டன்

டெஸ்ட் கேப்டன்

ஒருநாள், டி20 போட்டியில் எனது கேப்டன்ஷி எப்படி இருந்ததோ அதே போல் தான் டெஸ்ட் போட்டியையும் எதிர்கொள்வேன். எதிரணி தொடர்பாக அவர்கள் பலவீனங்கள் யுத்திகளை வகுப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அவர்களை பற்றியே நினைத்து கொண்டு இருக்க கூடாது. டெஸ்ட் போட்டியில் இந்த நொடியை பற்றி தான் யோசிக்க வேண்டும்.

சவாலான பயணம்

சவாலான பயணம்

சூழலை புரிந்து கொண்டு , செயல்படுவதே முக்கியம். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நடுவில் இருக்கிறோம். இனி 9 டெஸ்ட் போட்டிகள் உள்ளது, அனைத்திலும் வெல்ல வேண்டும் என்ற கட்டத்தில் இருக்கிறோம். இது சவாலான பணியாக இருக்கும்.

சீனியர்கள் எதிர்காலம்

சீனியர்கள் எதிர்காலம்

புஜாரா, ரஹானேவின் டெஸ்ட் எதிர்காலம் முடியவில்லை. அவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்பு வரும். தற்போது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இளம் வீரர்கள் அனைவரும் இந்தியா ஏ தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவும் வாய்ப்பும் வழங்குவது முக்கியம்.

Recommended Video

Who is Jaydev Shah? The Person Rohit Gave Trophy to After India's Win Over SL | Oneindia Tamil
ஆடுகளம்

ஆடுகளம்

மொஹாலி ஆடுகளம் இந்தியாவின் சராசரி ஆடுகளம் போல் தான் உள்ளது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கருதுகிறேன். காலை நேரத்தில் மொஹாலியில் குளிர் அதிகமாக உள்ளது. அது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். என்னுடன் களமிறங்கும் தொடக்க ஜோடி யார் என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. விஹாரி, கில், ஐயர், மாயங் ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

Story first published: Thursday, March 3, 2022, 14:52 [IST]
Other articles published on Mar 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+