Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்ல அறிவிருந்தா கேப்டனாக இருக்கலாம்.. !! யாரை சொல்கிறார் ரோகித் சர்மா..??

லக்னோ: இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக தலைமையேற்ற பிறகு நடைபெறும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த நிலையில் தனக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்தது குறித்து செய்தியாளர்களிடம் ரோகித் சர்மா பேசினார். அதனை தற்போது காணலாம்.

சவால்கள்

சவால்கள்

இந்திய அணியின் முழு நேர கேப்டனாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும் சவால்கள் காத்து கொண்டு இருக்கிறது. திறமையான இளம் வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். அவர்களுக்கு தலைமை தாங்குவதை எதிர்நோக்கியுள்ளேன். முழு நேர கேப்டனாக இருப்பதால் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சனுக்கு அதீத திறமை உள்ளது. அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. நான் பார்க்கும் போது எல்லாம் சிறந்த இன்னிங்சை அவர் விளையாடி இருக்கிறார். அவர் இலங்கை தொடரில் ஜொலிப்பார் என நம்புகிறேன். சூர்யகுமாருக்கு காயம் ஏற்பட்டது வருந்ததக்க விசயம் தான். ஆனால் இது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவை திறந்துள்ளது.

அறிவிருந்தால் போதும்

அறிவிருந்தால் போதும்

துணை கேப்டன், கேப்டனாக இருப்பதற்கு பந்துவீச்சாளர்களுக்கோ, பேட்ஸ்மேன்களுக்கோ தான் தகுதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிரிக்கெட் தொடர்பான அறிவு இருந்தாலே போதும். பும்ராவை எனக்கு நீண்டநாட்களாகவே தெரியும். அவருக்கு கிரிக்கெட் தொடர்பான அறிவு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

எதிர்காலம்

எதிர்காலம்

ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷன் இருவருமே தொடக்க வீரராக தான் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். அதனால் தான் தொடக்க வீரராக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினேன். பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தில் பங்காற்றும் பெரிய பொறுப்பு உள்ளது. ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடுங்கள் நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பு வந்து சேரும்.

Story first published: Wednesday, February 23, 2022, 18:14 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+