"பாக் சவாலுக்கு தயார்".. இந்தியா பிளேயிங் லெவன்.. உண்மையை உடைத்த ரோகித்.. ஆடுகளம் குறித்தும் பேச்சு
துபாய் : கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தியா பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி நாளை இரவு 7:30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.
Recommended Video
இதற்காக இரு அணி வீரர்களுமே கடந்த நான்கு நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதனை தற்போது காணலாம்.

கோலி என்ன செய்தார்
இரண்டு தரமான அணிகள் விளையாடும் போது ரசிகர்கள் ஒரு சிறந்த ஆட்டத்தை பார்ப்பார்கள். ஒரு வீரராக எங்களுடைய முழு கவனம் போட்டியை நோக்கி உள்ளது. வலைப்பயிற்சியில் எந்த வீரர் அதிக நேரம் எடுத்து பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பேட்டிங் பயிற்சியாளர் தான் முடிவு செய்வார். விராட் கோலி வலை பயிற்சியில் சிறப்பாக விளையாடினார்.

பிளேயிங் லெவன்
கோலி ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். பாகிஸ்தான் போட்டிக்காக கடினமாக பயிற்சியை மேற்கொண்டோம். கடந்த கால தோல்வியைப் பற்றி நினைப்பதில் எந்த பயனும் இல்லை. நாங்கள் ஒரு நாளுக்கு ஒரு போட்டி என்றே கவனம் செலுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவனை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை.

எப்போது முடிவு
ஆடுகளத்தை பார்த்துதான் எந்த வீரரை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்வோம். பல விஷயங்களையும் பார்த்து தான் தற்போது அணியில் உள்ள வீரர்களை தேர்வு செய்துள்ளோம். அணியில் இடம் பெற்ற ஒவ்வொருக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. பிளேயிங் வெவனில் சிறந்த அணியை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும். கடந்த சில காலங்களாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடுகிறார்.

ஆடுகளம் எப்படி
கடந்த சில போட்டிகளில் முக்கியமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.அவருடைய செயல்பாடுகளால் எங்களுக்கு ஒரு முறை கூட அவர் ஏமாற்றத்தை தரவில்லை. ஆடுகளம் குறித்து நாங்கள் நேற்று ஆடுகளப் பராமரிப்பாளரிடம் பேசினோம். அப்போது அவர் மாலை நேரத்தில் பனிபொழிவு இருக்காது என்று கூறி இருக்கிறார். நிச்சயமாக நாங்கள் தோல்வியை பற்றி அதிகம் பேசுவோம்.

சவாலுக்கு தயார்
அப்போதுதான் ஒரு அணியாக நாங்கள் முன்னேற முடியும். தோல்வி நிச்சயம் காயத்தை கொடுக்கும் .ஆனால் அது பற்றி நினைத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பாகிஸ்தான் உடன் அடைந்த தோல்விக்கு பிறகு நாங்கள் நிறைய போட்டியில் விளையாடி விட்டோம். இருப்பினும் இது எங்களுக்கு புதுமையான தொடக்கம். எதிரணி நமக்கு சவாலை கொடுத்துள்ளது. அதனை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications