Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன ஆனாலும் அதை மாற்றிக்கொள்ளவே மாட்டோம்”.. இந்திய அணியின் அடுத்த நடவடிக்கை.. ரோகித் சர்மா பளீச்!

மும்பை: இந்திய அணியின் இனி வரும் திட்டங்கள் குறித்து கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Recommended Video

IND vs AUS 1st T20: Predicted Playing 11 என்ன? | Aanee's Appeal

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.

அக்டோபர் மாதம் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி கட்ட பயிற்சி இந்த தொடர் தான் ஆகும். எனவே இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இல்லாததால் ஆசிய கோப்பையில் சொதப்பிய இந்தியாவுக்கு, இந்த முறை முழு பலமும் உள்ளது. எனினும் இனி வரும் போட்டிகளில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வருவீர்களா?, இந்தியாவின் அணுகுமுறை இனி எப்படி இருக்கும் என பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகின்றன.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் அதற்கெல்லாம் ரோகித் சர்மா தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வரவுள்ள அடுத்த 6 போட்டிகளிலும் நாங்கள் என்னவெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோமோ, அதனை செய்வோம். பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எந்தவித எல்லைகளும் கிடையாது. எனவே வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை பெறுவோம்.

நேரம் முடிந்தது

நேரம் முடிந்தது

கேப்டனாக பொறுப்பேற்றவுடனே இந்த ஆக்ரோஷ அணுகுமுறை குறித்து தெளிவாக பேசிவிட்டேன். அணி 10 /3 ரன்கள் என்ற நிலையில் இருந்தால் எப்படி ஆட வேண்டும், 50/0 என்ற நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது வீரர்களுக்கு நன்றாக தெரியும். எனவே திட்டங்கள் தீட்டும் நேரம் முடிந்துவிட்டது. இனி செயல்பாடுகளில் இறங்குவது தான்.

ரிவ்யூவ் மீட்டிங்

ரிவ்யூவ் மீட்டிங்

10 மாதங்களாக வீரர்களின் செயல்பாடுகள் குறித்து எந்தவித ஆலோசனைக் கூட்டமும் நடந்தவில்லை. இந்த 6 போட்டிகள் முடிந்தவுடன் மீண்டும் அதனை நடத்துவோம். அதில் டி20 உலகக்கோப்பையில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்வோம் எனக் கூறியுள்ளார்.

Story first published: Monday, September 19, 2022, 11:35 [IST]
Other articles published on Sep 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+