Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா, ரஹானே, தாக்கூர் எல்லாம் சென்னை வந்துட்டாங்க... களைகட்டப்போகும் போட்டிகள்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் வரும் 5ம் தேதி முதல் திட்டமிடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ள நிலையில் முதல் 2 போட்டிகள் சென்னையில் வரும் 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறவுள்ளது.

இதையொட்டி ரோகித் சர்மா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளனர்.

5ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

5ம் தேதி டெஸ்ட் தொடர் துவக்கம்

இந்தியா மற்றும் இலங்கை இடையில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளன. முதல் 2 போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்தப்பட உள்ளன.

சென்னை வருகை

சென்னை வருகை

இதையொட்டி கடந்த 22ம் தேதி இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சில வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கை தொடரை முடித்துக் கொண்டு இன்று சென்னை வரவுள்ளனர்.

சென்னை வருகை

சென்னை வருகை

இந்நிலையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஷர்துல் தாக்கூர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் நேற்று சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா பரிசோதனைகள்

கொரோனா பரிசோதனைகள்

இதனிடையே கேப்டன் விராட் கோலி இன்று வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல மற்ற அணி வீரர்களும் இன்று அல்லது நாளைக்குள் சென்னை வரவுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ள வீரர்கள் வரும் 5ம் தேதி முதல் போட்டியில் ஈடுபட உள்ளனர்.

Story first published: Wednesday, January 27, 2021, 13:28 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+