Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய மைல்கல்லை தொட்ட ரோகித் சர்மா.. சச்சின் சாதனையையும் முறியடித்தார்.. ஆனால் அவசரப்பட்டுட்டாரு

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை தொட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை இந்திய அணி எடுத்தது.

ரோகித்துக்கு பெருமை

ரோகித்துக்கு பெருமை

இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ரோகித் சர்மா 58 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சொந்த மண்ணில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சச்சின் கோலியை முந்தினார்

சச்சின் கோலியை முந்தினார்

அசாருதீன் 33 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் ரோகித் சர்மா 36 இன்னிங்ஸில் 2000 ரன்களை தொட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 38 இன்னிங்ஸிலும், விராட் கோலி 39 இன்னிங்சிலும், டிராவிட் 40 இன்னிங்சிலும் இந்த மைல் கல்லை தொட்ட நிலையில் ரோகித் சர்மா அவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா ஏழாவது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மாவுக்கு முன்பு 17,253 ரன்கள் உடன் சேவாக்கும், 17266 ரன்கள் உடன் தோனியும் இருக்கிறார்கள். இதனால் ரோகித் சர்மா இன்னும் இரண்டு மாதத்தில் இந்த பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

அபார சிக்சர்

அபார சிக்சர்

இந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ரோகித் சர்மா பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழற் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவை விட அதிவேகமாக ரன்களை சேர்க்கும் நிலைக்கும் இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.

Story first published: Saturday, March 11, 2023, 11:36 [IST]
Other articles published on Mar 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+