நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..!! உள்ளே சிரிப்பு..வெளியே அழுகை.. கோலிக்காக ரோகித் போட்ட டிவிட்..
மும்பை: விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு மட்டும் நிம்மதியாக இருக்கும்.
ஆம். டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவுக்கு தான், தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியும் வர உள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி தொடர்பாக ரோகித் சர்மா போட்ட டிவிட் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

பதவி பறிப்பு
விராட் கோலி டி20 போட்டியிலிருந்து விலகியதும் ரோகித் சர்மாவுக்கு அந்த பொறுப்பு வந்தது. அப்போதிலிருந்தே இருவருக்கும் கருத்து மோதல் இருந்ததாக தெரிகிறது. ரோகித் சர்மா தலைமை தாங்கிய நியூசிலாந்து தொடரிலிருந்து விராட் கோலி விலகினார். இந்த நிலையில், விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது

மோதல்
இதனால் தென்னாப்பிரிக்க தொடருக்கான பயிற்சி முகாமில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இதனால் பிரச்சினை கையை மீறி சென்றது. அந்த நிலையில் தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகினார். அதன் பின்பு தான், இந்திய அணி முகாமுக்கு கோலி வந்தார்

மன கசப்பு
இதனால், இருவருக்கும் இடையே மன கசப்பு இருப்பதாகவும், இருவரும் ஒரே அணியில் விளையாட மறுப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தங்களுக்குள் மன கசப்பு இல்லை என்று கோலி தெரிவித்ததை அடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் இருவரும் சமூக வலைத்தளத்தில் கூட பேசி கொள்ளவில்லை.

ரோகித் டிவிட்
இந்த நிலையில், விராட் கோலி தனது ராஜினாமா முடிவை ரோகித் சர்மாவிடம் தெரிவிக்கவில்லை. இதனை வெளிப்படுத்தும் விதமாக ரோகித் சர்மா வெளியிட்ட டிவிட்டில் விராட்டின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், கேப்டன் விராட் சிறப்பாக செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்தார். அடுத்த நகர்வுகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் ரோகித் தெரிவித்தார். இதனிடையே, அடுத்த கேப்டன் தாம் தான் என்று தெரிந்து மகிழ்ச்சியாக இருக்கும் ரோகித் சர்மா, வெளியே கவலைப்படுவது போல் நடிப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்


Click it and Unblock the Notifications