For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக் கழுத்தை நெறித்தது ஏன்? மீம்ஸ் பார்த்து பதில் சொன்ன ரோகித் சர்மா.. வீடியோ இதோ

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வந்துவிட்டாலே மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். காரணம் கிரிக்கெட் போட்டிக்கு நடைபெறும் சம்பவங்களை வைத்து அவர்கள் தங்களது கற்பனைக்கு ஏற்ப மீம்ஸ்களை உருவாக்குவார்கள்.

சில சமயம் போட்டி பார்க்காமலேயே மீம்சை பார்த்தாலே போட்டியில் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய முடியும். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தம்மை பற்றி இணையதளத்தில் வலம் வரும் மீம்ஸிகளை பார்த்து அதற்கு சிரித்தார்.

Rohit sharma reaction to watching Memes about him

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் மும்பை ரயிலில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என மீம்ஸ் போடப்பட்டது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மாவும் ரயில் கதவில் நிற்பது போல் மீம்ஸ் தயார் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று ரோகித் சர்மா ட்ரெஸ்ஸிங் ரூமில் சோகமாக உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை தாரே ஜமீன் பார் படத்தில் வரும் அந்த குழந்தையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த ரோகித் சர்மா நானும் குழந்தையில் இப்படித்தான் பள்ளியில் அமர்ந்திருப்பேன் என்று கூறினார். இதேபோன்று தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை ரோகித் சர்மா நெறிப்பது போன்ற புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு முறையும் மாங்காய் வாங்கும் போது ரோகித் சர்மா இப்படித்தான் பார்த்து வாங்குவார் என போடப்பட்டிருந்தது. இதனை பார்த்து விளக்கம் தெரிவித்துள்ள ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் டி ஆர் எஸ் முடிவு எடுக்கப்பட வேண்டி இருந்தது.

எப்போதும் விக்கெட் கீப்பர் தான் ஒரு கேப்டனுக்கு டி ஆர் எஸ் எடுக்கலாமா வேண்டாமா என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த தருணத்தில் நான் தினேஷ் கார்த்திக் கேட்டபோது எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார். 15 வினாடிகள் தான் இருக்கிறது, நான் என்ன செய்ய முடியும் என்பதால் தினேஷ் கார்த்திக்கை நான் அப்படி செய்தேன். தினேஷ் கார்த்திக், நானும் நல்ல நண்பர்கள் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இதைப் போன்று தொடர்ந்து மீம்ஸ்களை அனுப்புங்கள் நான் அதனை பார்க்கிறேன் எனவும் ரோகித் சர்மா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 2, 2023, 20:25 [IST]
Other articles published on May 2, 2023
English summary
Rohit sharma reaction to watching Memes about him தினேஷ் கார்த்திக் கழுத்தை நெறித்தது ஏன்? மீம்ஸ் பார்த்து பதில் சொன்ன ரோகித் சர்மா.. வீடியோ இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+