Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். போட்டியில் ரோஹித்தின் சாதனைகள்.. சூப்பர் சராசரி, சூப்பர் கேப்டன்.. பட்டியல் இதோ

துபாய் : நேற்று ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை செய்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 18ஆம் தேதி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தடுமாறிய இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

நேற்று ரோஹித் சர்மா 36 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இதற்கு முன் அவர் 42 பந்துகளில் அரைசதம் கடந்ததே அவரது வேகமான அரைசதமாக இருந்தது. அதை நேற்று முறியடித்தார்.

அதிக சராசரி

அதிக சராசரி

ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி அதிக சராசரி வைத்துள்ளவர்கள் பட்டியலில் (குறைந்த பட்சம் 50 இன்னிங்க்ஸ்), ரோஹித் முதல் இடத்தை பிடித்துள்ளார். துவக்க வீரர்கள் சராசரி பட்டியல் - ரோஹித் சர்மா 54.39, ஹஷிம் அம்லா 50.10, சச்சின் டெண்டுல்கர் 48.29, ஷிகர் தவான், 46.68, பிரையன் லாரா 46.08.

சிக்ஸ் அடிப்பதில் சாதனை

சிக்ஸ் அடிப்பதில் சாதனை

ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக இறங்கி சிக்ஸ் அடிப்பதில் அதிக சராசரி வைத்திருப்பவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். குறைந்தபட்சம் 100 சிக்ஸ் அடித்தவர்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். எத்தனை பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடிக்கிறார்கள் என்பதை வைத்து இந்த சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. ஷாஹித் அப்ரிடி - 26 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ், மெக்கல்லம் - 27 பந்துகள், ரோஹித் சர்மா - 35 பந்துகள், கிறிஸ் கெயில் - 40 பந்துகள், குப்தில் - 45 பந்துகள்.

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் ஐந்தாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் பிஷன் சிங் பேடி, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, தோனி ஆகியோர் மட்டுமே இந்த பெருமையை பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, September 20, 2018, 12:07 [IST]
Other articles published on Sep 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+