அந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு
டெல்லி : ஆரம்ப காலத்தில் துவக்க வீரர் ரோகித் சர்மாவை பார்க்கும்போதெல்லாம் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கை பார்ப்பதுபோலவே தனக்கு தோன்றியதாக முன்னாள் இந்திய ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இன்சமாம் ஆடும்போதெல்லாம் பௌலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள நிதானத்தை கடைபிடிப்பார். அதேபோல ரோகித் சர்மாவும் நிதானமாக எதிரணி பௌலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வார் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2003லிருந்து 2007 வரை பாகிஸ்தானின் கேப்டனாக செயல்பட்ட இன்சமாம் உல் ஹக், நெருக்கடியான நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை சிறப்பாக வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கேப்டனாக கடந்த 2003 முதல் 2007 வரை செயல்பட்டவர் இன்சமாம் உல் ஹக். நெருக்கடி நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு, அணியை திறம்பட வழிநடத்திய இவர், 120 டெஸ்ட் போட்டிகளிலும் 300 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர்.
இதேபோல கடந்த 2007 ஜூன் மாதத்தில் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ரோகித் சர்மா விளையாடினார். அதே ஆண்டின் இறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா இடம்பெற்றிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த போட்டியில் அவர் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, அவரது ஆரம்ப நாட்களில், பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இன்சமாமை தனக்கு நினைவுறுத்தியதாக முன்னாள் ஆட்டக்காரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். யூ-டியூப் உரையாடல் ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், எதிரணியினரின் பந்துவீச்சை நிதானமாக கையாளும் இன்சமாமின் திறன் ரோகித்திற்கும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications