குழந்தை பெயரை ட்விட்டரில் பகிர்ந்த ரோஹித் சர்மா.. ட்ரிபுள் செஞ்சுரி பார்ட்டி கேட்கும் ரசிகர்கள்
மும்பை : ரோஹித் சர்மாவிற்கு தன் குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ரோஹித் சர்மா தற்போது குழந்தையின் பெயரை இணையத்தில் தன் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்.

பெண் குழந்தை பிறந்தது
கடந்த டிசம்பர் 30 அன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால், மூன்றாவது டெஸ்ட்டுடன் இந்தியா புறப்பட்டார் ரோஹித் சர்மா. நான்காவது டெஸ்டில் அவர் ஆடவில்லை.
குழந்தையின் பெயர் என்ன?
தன் குழந்தையின் பெயர் "சமைரா" என ட்விட்டரில் தெரிவித்தார் ரோஹித் சர்மா. கூடவே பிரபல ஆங்கில பாடல் (Maroon 5 - Girls Like You) ஒன்றின் வரிகளையும் சேர்த்து கூறி இருந்தார்.

அழகான புகைப்படம்
ரோஹித் பகிர்ந்த புகைப்படத்தில் அவர் மனைவி ரித்திகா குழந்தையை கையில் ஏந்தி இருக்க, ரோஹித் குழந்தையை பார்த்து ரசிக்கும் அழகான காட்சி இடம் பெற்றுள்ளது.

அடுத்து ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடரில் பாதியில் இந்தியா சென்ற ரோஹித் சர்மா, ஒருநாள் தொடரில் பங்கேற்க மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார் என கூறப்படுகிறது. தோனியும் ஒருநாள் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளார்.
ட்ரிபுள் செஞ்சுரி அடிங்க
ரோஹித் ரசிகர்கள் பலரும் இடைவிடாமல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ரோஹித் ஒருநாள் போட்டியில் ட்ரிபுள் செஞ்சுரி அடிப்பார் என கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications