Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரோகித்.. சேஸிங் ரொம்ப கஷ்டமாக இருக்கும் என தெரியும்..ரோகித் ஓபன் டாக்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தி அசத்தியிருக்கிறது.

இந்த போட்டியில் விராட் கோலி 53 பந்துகளை எதிர் கொண்டு 82 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினர்.

வார்த்தையே இல்லை

வார்த்தையே இல்லை

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய ரோகித் சர்மா , நான் ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் தான் இருந்தேன். எனக்கு போட்டியை குறித்து பேச வார்த்தையே வர வில்லை. இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இதுபோன்ற திரில்லான ஆட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். நாங்கள் ஆட்டத்தில் எங்களது பிடி நீண்ட நேரம் இருக்க வேண்டும் என முன்பே திட்டமிட்டோம்.

ஆட்டத்தையே மாற்றியது

ஆட்டத்தையே மாற்றியது

ஹர்திக் பாண்டியா, விராட் கோலி இடையிலான கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. ஸ்விங் மற்றும் seam பந்துகள் ஆடுகளத்தில் எடுபட்டது. இது பந்துவீச்சாளர்கள் கண்னோட்டத்தில் பார்க்கும்போது நிச்சயம் நல்ல விஷயம்.

கஷ்டமாக இருக்கும்

கஷ்டமாக இருக்கும்

பாகிஸ்தான் அணியிலும் இஸ்திகார் மற்றும் மசூத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்கள் அணியை மீட்டனர். இறுதி கட்டத்திலும் அவர்கள் அதிரடியாக விளையாடினர். இந்த இலக்கை துரத்துவது மிகவும் கஷ்டம் என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

அவர்கள் களத்தில் அமைதியாக நின்று போட்டியை கடைசி வரைக்கும் கொண்டு சென்றது மிகவும் முக்கியமாக அமைந்தது. இந்த வெற்றி எங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும். டி20 உலக கோப்பை தொடரில் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க வேண்டியது மிகவும் அவசியம்.இந்த ஆட்டத்தில் நாங்கள் எந்த கட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை .ஆனால் நாங்கள் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Story first published: Sunday, October 23, 2022, 19:26 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+