Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பா ஆன ரோஹித் சர்மா.. பெண் குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியோடு இந்தியா விரைகிறார்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில், அவரது மனைவி இந்தியாவில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் திருமணம்

ரோஹித் திருமணம்

ரோஹித் சர்மாவிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா சஜ்தே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் விரைவில் தந்தை ஆக உள்ளதாக மகிழ்ச்சியுடன் கடந்த வாரம் அளித்த பேட்டியின் போது கூறினார் ரோஹித்.

நண்பர்கள் வாழ்த்து

நண்பர்கள் வாழ்த்து

ரித்திகாவுக்கு குழந்தை பிறந்த செய்தி பற்றி ரோஹித் மற்றும் குடும்பத்தினர் யாரும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து கூறி வருவதை வைத்தே இந்த செய்தி வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

இந்தியா வரும் ரோஹித்

இந்தியா வரும் ரோஹித்

ரோஹித் சர்மா பேட்டி அளித்த அடுத்த சில நாட்களிலேயே குழந்தை பிறந்த செய்தியும் வந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரோஹித் சர்மா இந்தியா வருவார் என கூறப்படுகிறது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது.

அரைசதம் அடித்தார்

அரைசதம் அடித்தார்

இந்தியா நேற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. ரோஹித் அந்த போட்டியில் அரைசதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்தார். அந்த மகிழ்ச்சியோடு, குழந்தை பெற்ற மகிழ்ச்சியும் ரோஹித்தை வந்தடைந்துள்ளது. வாழ்த்துக்கள் ரோஹித்!!

Story first published: Monday, December 31, 2018, 12:11 [IST]
Other articles published on Dec 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+