Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நட்பு காதலாகி திருமணத்தில் வந்து நிற்கும் ரோஹித் சர்மா, ரித்திகா

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய மேனேஜரும், நெருங்கிய தோழியுமான ரித்திகா சாஜ்தேவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன்பு தான் சுரேஷ் ரெய்னா தனது பள்ளிகால தோழி பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது மேனேஜரும், தோழியுமான ரித்திகா சாஜ்தேவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

நல்ல நண்பர்களாக பழகி வந்த அவர்கள் காதலர்களாக மாறி தற்போது கணவன், மனைவியாக உள்ளனர்.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

ரித்திகா ஒரு ஸ்போர்ட்ஸ் மேனேஜர். அவர் ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் மேனேஜராக உள்ளார். ரித்திகாவும், ரோஹித்தும் 6 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர்.

காதல்

6 ஆண்டுகளாக இருந்த நட்பு காதலாக மாறியதை ரோஹித் மற்றும் ரித்திகா உணர்ந்தனர். கடந்த 30ம் தேதி ரோஹித் சர்மாவுக்கு ரித்திகா ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, என் முக்கிய நபரும், எனக்கு தெரிந்த சிறந்த நபருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஹேப்பி பர்த்டே ரோ என்று தெரிவித்திருந்தார்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ரோஹித் தனது காதலை வித்தியாசமாக ரித்திகாவிடம் தெரிவிக்க நினைத்தார். இதையடுத்து அவர் ரித்திகாவை மும்பையில் உள்ள போரிவாலி ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு அழைத்துச் சென்று காதலை தெரிவித்தார். அந்த கிளப் மைதானத்தில் தான் ரோஹித் தனது 11வது வயதில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடினார்.

திருமணம்

திருமணம்

போரிவாலி கிளப்பிற்கு அழைத்துச் சென்ற பிறகு நள்ளிரவில் ரித்திகாவிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். அவரும் சரி என்றவுடன் அவரின் கை விரலில் சாலிடெய்ர் மோதிரத்தை அணிவித்தார் ரோஹித்.

மோதிரம்

ரித்திகா திருமணத்திற்கு சம்மதித்த கையோடு அவருடன் நிச்சிய மோதிரம் தெரியும்படி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரோஹித். இது குறித்த ட்வீட்டில், சிறந்த நண்பர்களாக இருந்து காதலர்களாக ஆகியுள்ளோம். இதைவிட சிறப்பாக அமைய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 4, 2015, 13:55 [IST]
Other articles published on May 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+