Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அக்மார்க் ரோகித் சர்மா ஆட்டம்னா இதுதான்.. 8 ரன்களில் மிஸ்ஸான சதம்.. ஆனாலும் உருத்தான சம்பவம்!

சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 63வது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் 3வது ஓவரிலேயே பெவிலியன் திரும்பிய நிலையில், சீனியர் வீரராக பொறுப்புடன் விளையாடி அரைசதத்தை எட்டி இருக்கிறார். ஆனால் 8 ரன்களில் சதத்தை மிஸ் செய்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சண்டிகர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னிலும், விராட் கோலி டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

Rohit Sharma

இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரோகித் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இணைந்தது. பிட்சில் ஸ்விங் மற்றும் பேஸ் இருந்ததன் காரணமாக இருவருமே நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பக்கம் நிதானமாக ரன்கள் சேர்க்க, ரோகித் சர்மா எந்த அவரசமும் காட்டவில்லை.

13 ஓவர்களுக்கு பின் ரோகித் சர்மா கொஞ்சம் கொஞ்சமாக அட்டாக் செய்ய தொடங்கினார். அதிலும் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்த பின் ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிரடிக்கு திரும்பிய ரோகித் சர்மா 58 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் ரோகித் சர்மா முன் வைத்த காலை பின் வைக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஃபீல்டர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதை பார்த்த ரோகித் சர்மா, அதற்கேற்ப ஷாட்களை விளையாட தொடங்கினார். அதிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்களை ரோகித் சர்மா விளையாடியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கட் ஷாட், ஸ்வீப் ஷாட், புல் ஷாட் என்று அத்தனையையும் ரோகித் சர்மா பயன்படுத்த, ஆட்டம் முழுக்க முழுக்க ரோகித் சர்மா கைகளுக்கு வந்தது.

90 ரன்களை கடந்த பின் ரோகித் சர்மா சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் 92 ரன்கள் எடுத்திருந்த போது, கீமோ பால் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா சதத்தை மிஸ் செய்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Story first published: Saturday, October 3, 2026, 15:49 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+