For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கையில் காயம்.. சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரோஹித் இல்லை!

By Mathi

டெல்லி: கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் ரோஹித் சர்மா இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

Rohit Sharma ruled out of CLT20 due to injury

சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார் ரோஹித். அப்போது மேலும் 4 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு ரோஹித் சர்மா அறிவுறுத்தப்பட்டார்.

இதனால் செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரிலும் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Story first published: Wednesday, September 10, 2014, 13:45 [IST]
Other articles published on Sep 10, 2014
English summary
In a big setback to the Mumbai Indians, skipper Rohit Sharma has been ruled out of the Champions League Twenty20 due to multiple injuries.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+