Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சாதனையை தகர்க்க முடியாது என்கிறார் லாரா, ரஜினியால் முடியும் என்கிறது இந்த வீடியோ!

மெல்பர்ன்: ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 264 ரன்களை விளாசிய ரோகித் ஷர்மாவின் சாதனையை வேறு யாராலும் முறியடிக்க முடியாது என்று மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான பிரையன் லாரா கூறியுள்ளார். ஆனால் ரஜினியால் மட்டும் அந்த சாதனையை எளிதாக முடிக்க முடியும் என்கிறது ஒரு வீடியோ.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்களை குவித்தார் இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா. ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுவாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்த லாரா "200 ரன்கள் அடிக்கப்படக் கூடியது என்று நான் நீண்ட நாட்களாக நம்பியிருந்தேன். ஆனால் ரோகித் ஷர்மா அடித்த ரன்களை தாண்டிச் செல்வது என்பது மற்றொரு பேட்ஸ்மேனுக்கு இயலாத காரியம் என்றே நான் கருதுகிறேன்.

டி20 கிரிக்கெட் போட்டிகளால்தான், பேட்ஸ்மேன்கள் இந்த அளவுக்கு அதிரடியாக ஆட முடிகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ஸ்கோர் சாதனை 3 முறை தகர்க்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு உதாரணம். இவ்வாறு லாரா தெரிவித்தார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக, கிரிக்கெட்டில் அவர் என்ன மாயாஜாலங்களை நிகழ்த்துவார் என்ற வீடியோ ஒன்று யூடூப்பில் உள்ளது. லாரா சொல்வதையும், இந்திய வீடியோவையும் வைத்து பார்க்கும்போது ரோகித் சாதனையை தகர்க்கும் ஒரே நபர் நம்ம தலைவர் ரஜினிகாந்த்துதான் என்பது நன்றாக தெரியும். பின்ன இப்படி அடிச்சா எப்படி? வீடியோவ பாருங்க, எப்படி சாதனையை தகர்க்கலாம் என்பது புரியும்.

Story first published: Friday, November 21, 2014, 16:46 [IST]
Other articles published on Nov 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+