Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லி அடிச்சாரு பாருப்பா? ரோகித் 3 ஆண்டுக்கு முன்பு போட்ட ட்வீட்.. திடீரென இப்போ ட்ரெண்ட் ஆவது ஏன்

மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்விட்டர் பதிவு தற்போது திடீரென இணையத்தை கலக்கி வருகிறது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

இதனையடுத்து தொடரின் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. வைட் வாஷை தவிர்ப்பதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேச சுற்றுப்பயணம்

வங்கதேச சுற்றுப்பயணம்

இந்நிலையில் ரோகித் சர்மா கடந்த 2019ம் ஆண்டு போட்ட ட்விட்டர் பதிவு ஒன்று பேசுப்பொருளாகியுள்ளது. அதாவது முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என போராடியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் கடைசி நேரத்தில் வந்து அதிரடி காட்டினார்.

ரோகித் போராட்டம்

ரோகித் போராட்டம்

9வது வீரராக களமிறங்கிய அவர், 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாசினார். ஒருபுறம் விரல்களில் காயத்தால் வலி பெரிதாக இருந்த சூழலில் மற்றொருபுறம் இந்திய அணியை விட்டுவிடக்கூடாது என்பதற்காக போராடினார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப்பட்டது.

பழைய ட்விட்டர் பதிவு

பழைய ட்விட்டர் பதிவு

இதன் காரணமாக தான் தற்போது ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது, "நான் எனது அணிக்காக மட்டும் களமிறங்கவில்லை, எனது நாட்டிற்காக களமிறங்குகிறேன்" என ட்வீட் செய்திருந்தார். அதனை காப்பாற்றும் வகையில் தான் தற்போது வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்.

ரோகித்திற்கு சிக்கல்

ரோகித்திற்கு சிக்கல்

இந்தியா வங்கதேசம் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். தற்போது மும்பைக்கு சென்றுள்ள அவர், நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையை பொறுத்தே டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

Story first published: Friday, December 9, 2022, 22:58 [IST]
Other articles published on Dec 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+