மூன்றே மாதங்கள் தான்.. ரோகித் சர்மாவின் பிரமிப்பூட்டும் கேப்டன்சி ரெக்கார்ட்.. கோலியை விட சிறந்ததா?
பெங்களூரு: பொறுப்பேற்ற 3 மாதங்களில் ரோகித் சர்மா, தான் உலகின் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது.
இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 15வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இந்திய அணி ராஜாவாக திகழ்கிறது.

ரோகித் சர்மா கேப்டன்சி
இந்திய அணியின் இந்த சாதனை வெற்றியை அடுத்து அனைவரும் புதிய கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் அவரின் கேப்டன்சியில் எந்தவொரு தொடரையும் இழக்கவில்லை, அதே வேளையில் அவரின் கேப்டன்சியில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இருந்துள்ளது.

முழு வெற்றி பட்டியல்
ரோகித் சர்மா முழு நேர கேப்டனான பிறகு, இந்தியா எதிர்கொண்டுள்ள தொடர்கள் மற்றும் வெற்றி விவரங்கள்
3 - 0 vs நியூசிலாந்து ( டி20 தொடர் )
1 - 0 vs நியூசிலாந்து ( டெஸ்ட் தொடர்)
3 - 0 vs வெஸ்ட் இண்டீஸ் ( ஒருநாள் தொடர்)
3 - 0 vs வெஸ்ட் இண்டீஸ் ( டி20 தொடர் )
3 - 0 vs இலங்கை ( டி20 தொடர் )
2 - 0 vs இலங்கை ( டெஸ்ட் தொடர் )

சாதனை ரெக்கார்ட்
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ரோகித் சர்மா தலைமையில் இதுவரை இந்திய அணி 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 24 போட்டிகளில் வெற்றியை பெற்று பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 85.71 % ஆகும். இதே போல 50 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை ரோகித் தலைமையில் இந்திய அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 11 வெற்றிகளை தனதாக்கியுள்ளது. வெற்றி சதவீதம் 84.61 ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சி
வரலாற்றில் இதற்கு முன்னர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி செய்தது கிடையாது. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடர் தான் அவரின் அறிமுக போட்டியாகும். ஆனால் அதிலே 2 -0 என வைட் வாஷ் செய்துள்ளது. மேலும் 2 ஆட்டங்களுமே 3 நாட்களுக்குள் முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அதிகரித்த நம்பிக்கை
விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பதவியை ரோகித்திடம் கொடுத்த போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அடுத்தடுத்து அபார வெற்றிகளை பெற்றுத்தந்து ரோகித் சர்மா அசத்தியிருக்கிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications