
இந்திய அணி சொதப்பல்
முதல் ஒருநாள் போட்டியை போன்றே குறைவான இலக்கு என்பதால், இந்திய அணி எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தான் மிஞ்சியது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட், ஷிகர் தவான் (9), ரிஷப் பண்ட் (0), விராட் கோலி (16) என அடுத்தடுத்து வெளியேறினர்.

அதிர்ச்சி தோல்வி
லோயர் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் (27), ஹர்திக் பாண்ட்யா (29) ஆகியோர் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அவர்களால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. இதனால் 38.5 ஓவர்களில் இந்திய அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 1 -1 என சமநிலை அடைந்துள்ளது.

ரோகித் விளக்கம்
இந்நிலையில் தோல்வி குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். அதில், நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். விக்கெட்கள் மளமளவென விழுந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் மொயீன் அலி - டேவிட் வில்லி ஆகியோர் பார்டர்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அந்த ஸ்கோர் மிகவும் கடினமான ஒன்று என கூறவில்லை. எங்கள் பேட்டிங் சொதப்பியதை ஒப்புக்கொள்கிறேன்.

பிட்ச் கொடுத்த அதிர்ச்சி
லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. நேரம் போக போக பேட்டிங்கிற்கு நன்கு உதவும் என நினைத்தேன். ஆனால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இங்கிலாந்து போன்ற அணியை எதிர்கொள்ளும் போது, ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று ஆட வேண்டும். அது நடக்கவில்லை. அடுத்த போட்டியில் அனைத்தையும் சரிசெய்துக் கொண்டு வருவோம் என ரோகித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











