Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் கேப்டனின் ஓவியம்... ரசிகரின் கைவண்ணம்

மும்பை : ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சத சாதனையை கொண்டுள்ளவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

Recommended Video

CSK suspends team doctor Madhu Thottappillil for tweet on 'pm cares'

ஒருநாள் போட்டிகளின் ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இவரது சாதனை பயணங்கள் தொடர்ந்து வருகின்றன.

இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அதிகமான பாலோயர்ஸ் உள்ள நிலையில், தற்போது டிவிட்டர் மூலம் ஒரு ரசிகர் இவரது ஓவியத்தை வரைந்து பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் பரபர

சமூக வலைதளத்தில் பரபர

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் துணை கேப்டனாக உள்ளவர் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள ரோகித் சர்மாவிற்கு இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பாலோயர்களும் டிவிட்டரில் 16.5 மில்லியன் பாலோயர்களும் உள்ளனர்.

தரவரிசையில் 2வது இடம்

தரவரிசையில் 2வது இடம்

ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சத சாதனையை தன்னுடைய கைகளில் கொண்டுள்ள ரோகித் சர்மா, இந்த வடிவத்தில் ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார். கடந்த 2007ல் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய ரோகித் சர்மா, இதுவரை 224 போட்டிகளில் விளையாடி 9,115 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 49.27 மற்றும் 29 சதங்களையும் அவர் அடித்துள்ளார்.

டெஸ்ட்டில் 32 போட்டிகள்

டெஸ்ட்டில் 32 போட்டிகள்

இதேபோல டி20 வடிவத்தில் 108 போட்டிகளில் விளையாடி, 2,773 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா. இதன் சராசரி 32.62. மேலும் டி20 வடிவத்தில் மற்ற வீரர்கள் செய்யாத அளவில் 4 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,141 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் இவர் கைவசம் உள்ளன.

ரசிகரின் கைவண்ணம்

ரசிகரின் கைவண்ணம்

விராட் கோலியை அடுத்ததாக சமூகவலைதளங்களில் ரோகித் சர்மாவிற்கு மிகச்சிறந்த அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், டிவிட்டர் மூலம் ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவின் ஓவியத்தை வரைந்து பகிர்ந்துள்ளார். மேலும் ரோகித்தையும் டேக் செய்துள்ளார். இந்த ஓவியம் குறித்த கருத்துக்களை பகிரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Thursday, June 18, 2020, 10:04 [IST]
Other articles published on Jun 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+