For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட், ரோகித் பேட்டிங்கை பார்த்து எதிரணி பயப்படறாங்க... கிரண் மோர் பாராட்டு

டெல்லி : கேப்டன் விராட் கோலி இல்லாத டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் ரோகித் சர்மாவின் பிட்னஸ் மிகவும் முக்கியம் என்று முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

இருவரும் இல்லாத டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்வது மிகவும் கடினமானது என்றும் சமநிலை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிரணியினர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை கண்டு பயப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் பகலிரவு போட்டி

முதலில் பகலிரவு போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை முதல் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. முதலில் பகலிரவு டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி அதையடுத்து நடைபெறவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் தன்னுடைய குழந்தை பிறப்பிற்கென நாடு திரும்புகிறார்.

மருத்துவ குழு டெஸ்ட்

மருத்துவ குழு டெஸ்ட்

இந்நிலையில் இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் நேற்று சிட்னி சென்றுள்ள குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார். குவாரன்டைனை முடித்தபின்பு அவரை பிசியோ மற்றும் பிசிசிஐ மருத்துவ குழுவினர் டெஸ்ட் செய்து போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளனர்.

எதிரணி அச்சம்

எதிரணி அச்சம்

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை கண்டு எதிரணியினர் பயப்படுவதாகவும் அவர்கள் இருவரும் அடித்து ஆரம்பித்துவிட்டால் அவர்களை தடுப்பது கடினம் என்று அவர்கள் அறிந்துள்ளதாகவும் முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் இல்லாத டெஸ்ட் போட்டியில் சமநிலை காணப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரோகித்தின் பிட்னஸ் முக்கியம்

ரோகித்தின் பிட்னஸ் முக்கியம்

மேலும் விராட் கோலி இல்லாத போட்டிகளில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் மற்றும் அவரது இருப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளதையும் மோர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்திய அணியில் ரோகித் மிகவும் முக்கியமான வீரர் என்றும் கூறியுள்ளார்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

ரோகித் அணியில் இருந்தால் அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் கிரண் மோர் கூறினார். மேலும் விராட் இல்லாத நிலையில் இளம் வீரர்களும் தங்களை நிரூபிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, December 16, 2020, 18:43 [IST]
Other articles published on Dec 16, 2020
English summary
Rohit in the team, you have always got a chance of winning a Test match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+