Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதை கவனித்தீர்களா??” முதல் ODI போட்டியில் ரோகித் செய்த விஷயம்.. ரசிகர்களிடம் குவியும் பாராட்டு!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Recommended Video

IND vs ENG Rohit Sharma அடித்த SIX! சிறுமிக்கு பலத்த அடி *Cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

ரோகித்தின் அதிரடி

ரோகித்தின் அதிரடி

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டம் மூலம் இலக்கை எட்ட வைத்தார். 58 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 76 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். அவர் அடித்த ஒரு சிக்ஸர் தான் சிறுமியை காயப்படுத்தியது.

சிறுமிக்கு காயம்

சிறுமிக்கு காயம்

டேவிட் வில்லி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா புல் ஷாட்டை ஆடினார். அப்போது பேட்டிங் மையப்பகுதியில் பட்ட பந்து, ஃபைன் லெக் திசையில் இருந்த சிறுமியின் மீது பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரமாக அழுதுக்கொண்டே இருந்த அந்த சிறுமி, மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு சமாதானம் ஆனது.

ரோகித் சர்மாவின் செயல்

ரோகித் சர்மாவின் செயல்

இந்நிலையில் சிறுமியை காயப்படுத்திவிட்டோமே என்ற வருத்தத்தில் ரோகித் சர்மா களத்தில் நின்றுக்கொண்டிருந்தார். எனினும் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற ரோகித் சர்மா, அவரின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார். மேலும் சிறுமியிடம் கொஞ்சி பேசிவிட்டு பெவிலியனுக்கு சென்றார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

போட்டியில் ரசிகர்களின் மீது பந்துகள் விழுவது சகஜமான ஒன்று தான். எனினும் வருத்தத்தில் போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா நலம் விசாரித்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் அந்த சிறுமியின் பெற்றோரே, ரோகித் அதிக சிக்ஸர்களை அடிக்க வேண்டும் என வாழ்த்துக்கூறியுள்ளனர்.

நிறுத்தப்பட்ட போட்டி

நிறுத்தப்பட்ட போட்டி

அங்கிருந்த மற்ற ரசிகர்கள் சிறுமியை சமாதானப்படுத்திய போதும், சிறுமி அழுதுக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, இரு அணி வீரர்களும், என்ன ஆனது என்பது புரியாமல் களத்தில் காத்துக்கொண்டிருந்தனர். ரோகித் சர்மாவும் காயப்படுத்திவிட்டோமே என மனம் வருந்தி நின்றார்.

வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 13, 2022, 19:38 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+