Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலைல எழுந்தது முதல்.. அக்கடான்னு டிவி பார்ப்பது வரை.. இப்படித்தாங்க போகுது பொழுது!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, லாக்டவுன் சமயமாச்சே என்று வீட்டுக்குள் ஜாலியாக அடைந்து கிடக்காமல் ஏகப்பட்ட வேலைகளைச் செய்து படு பிசியாகவே இருக்கிறாராம்.. யார் சொன்னா.. அவரே சொல்லிருக்காரு.

Recommended Video

IPL 2020 : 5 incidents that changed IPL history

எல்லா கிரிக்கெட் வீரர்களையும் போலவே ரோகித் சர்மாவும் மீண்டும் எப்படா விளையாடப் போவோம் என்று ஆவலாக காத்திருக்கிறார். அதேசமயம், கிடைத்துள்ள இந்த கேப்பில் வீட்டினருடன் நன்றாக செலவழிக்கிறார்.

அவரது ஒவ்வொரு நாளும் எப்படிப் போகிறது என்பதை அழகாக ஒரு வீடியோ வடிவில் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதைப் பார்த்தாலே தெரிகிறது மனிதர் எவ்வளவு பிசியாக இருக்கிறார் என்று.

ஜூஸோ.. காபியோ

ஜூஸோ.. காபியோ

அழகான காபியோடு அவரது பொழுது ஆரம்பிக்கிறது. காபியை அருந்தியபடி ஜன்னலுக்கு வெளியே அமைதியாக காட்சி தரும் மும்பையை ரசிக்கிறார். ரசித்தபடியே அவரது அன்றைய காலை தொடங்குகிறது. முதலில் உடற்பயிற்சி. வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். உடற்பயிற்சியின்போது கூடவே அவரது குட்டி மகளும் புகுந்து குட்டிக் கலாட்டா செய்கிறார்.

மகளையும் சுமந்து எக்சர்ஸைஸ்

மகளையும் சுமந்து எக்சர்ஸைஸ்

விடுவாரா.. அவரையும் தூக்கிக் கொண்டு உடற்பயிற்சி தொடர்கிறது. அதன் பின்னர் மனைவி, மகளுடன் ஜாலியாக ஒரு பொழுது போக்கு. மகளுடன் சேர்ந்து அப்பாவும், அம்மாவும் விளையாடுகிறார்கள். அதன் பின்னர் துணி துவைப்பது, மனைவிக்கு சமையலில் உதவுவது என தொடர்கிறார் ரோகித் சர்மா. கணவருக்குப் பிடித்ததை செய்து தருகிறார் மனைவி.

View this post on Instagram

😉

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

மகள்கள்னாலே சேட்டைதானே

இப்படியாக ஓடுகிறது அன்றைய பொழுது. இடைஇடையே மகளின் குட்டிக் குட்டி சேட்டைகள் தொடர்கின்றன. இரவும் வந்து சேருகிறது.. குடும்பமாக அமர்ந்து படம் பார்த்து, நாடகம் பார்த்து அன்றைய பொழுதை முடிக்கின்றனர். இந்த மொத்த சம்பவங்களையும் அழகான வீடியோ தொகுப்பாக போட்டிருக்கிறார் ரோகித் சர்மா. அருமையாக இருக்கிறது. இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வைரலாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் அடுத்தடுத்து பல சாதனைகளையும் அந்த அணி செய்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் காலத்தில் இருந்ததை விட இப்போது மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக இருக்கிறது. வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான சவாலாகவும் இது மாறியுள்ளது. இந்த ஆண்டு சீசனுக்காக அனைவரும் காத்திருப்பதை போல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ஆவலோடு காத்துள்ளனர்.

Story first published: Friday, April 17, 2020, 17:41 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+