Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம்... ரோகித் சர்மாவின் சிக்ஸரால் ஏற்பட்ட பரபரப்பு.. வேகமாக பரவும் வீடியோ!

லண்டன்: ரோகித் சர்மாவால் சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் முதல் ஒருநாள் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

Indian Team-க்கு Virat Kohli பாரமாகிவிட்டாரா? *VOX

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்திய அணி குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். ஷிகர் தவான் 54 பந்துகளில் 31 ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

திடீரென பரபரப்பு

திடீரென பரபரப்பு

இந்நிலையில் போட்டியின் போது ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்ஸரால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. டேவிட் வில்லி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா புல் ஷாட்டை ஆடினார். அப்போது பேட்டிங் மையப்பகுதியில் பட்ட பந்து, ஃபைன் லெக்கில் சிக்ஸருக்கு பறந்தது. ஆனால் அங்கிருந்த ஒரு சிறுமியின் மீது பந்து பட்டு பரபரப்பை கிளப்பியது.

நிறுத்தப்பட்ட போட்டி

நிறுத்தப்பட்ட போட்டி

அங்கிருந்த மற்ற ரசிகர்கள் சிறுமியை சமாதானப்படுத்திய போதும், சிறுமி அழுதுக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, இரு அணி வீரர்களும், என்ன ஆனது என்பது புரியாமல் களத்தில் காத்துக்கொண்டிருந்தனர். ரோகித் சர்மாவும் காயப்படுத்திவிட்டோமே என மனம் வருந்தி நின்றார்.

ட்ரெண்டிங் வீடியோ

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதித்து பார்த்தனர். அதில் பெரிய காயம் எதுவும் இல்லை என்று கூறிய பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Wednesday, July 13, 2022, 10:23 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+