Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி உங்க பாட்சா பலிக்காது தம்பி.. ஸ்டார்க்கை சமாளிக்க ரோகித்தின் புதிய வியூகம்.. ஒரு அடி நகரலையே!

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க்கை சமாளிப்பதற்காக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மொத்த திட்டத்தையும் மாற்றியது பலன் கொடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த போதும் முக்கியமான பார்ட்னர்ஷிப்களை பெற்றது. இதனால் 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது.

இந்திய இன்னிங்ஸ்

இந்திய இன்னிங்ஸ்

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி எப்படி மிட்செல் ஸ்டார்க்கை சமாளிக்கப்போகிறது என்ற கவலை தான் ரசிகர்களிடம் இருந்தது. ஏனென்றால் கடந்த 2 போட்டிகளிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கின் ஸ்விங்கில் சிக்கி சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். குறிப்பாக இந்தியாவின் டாப் ஆர்டர் முற்றிலுமாக சரிந்தது. எனவே இன்று மாலை நேரத்தில் ஈரப்பதமும் இருக்கும் என்பதால் ஸ்டார்க்கின் ஸ்விங்கை சமாளிப்பதில் கவலை இருந்தது.

தரமான பதிலடி

தரமான பதிலடி

இந்நிலையில் அதற்கெல்லாம் சிறப்பான பதிலடி கொடுத்தனர் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஸ்டார்க்கிற்கு நிறைய ஸ்விங் ஆனது. ஆனால் அதனை பொருட்படுத்திக் கொள்ளாமல் நிதானம் காட்டினர். கடந்த போட்டிகளில் ஸ்டார்க்கின் பந்துகளை ஸ்கொயர் திசைகளில் மடக்கி அடித்த போது தான் எட்ஜாகி அவுட்டாகினர். எனவே இந்த முறை ரன் தேவை என்ற நேரத்தில் மட்டுமே பேட்டை விட்டனர். அதுவும் ஸ்கொயர் திசைக்கு செல்லவில்லை.

மாற்று ப்ளான்

மாற்று ப்ளான்

அனைத்து பந்துகளையும் ஸ்ட்ரெயிட்டாக மட்டுமே அடித்தனர். அதாவது பவுண்டரி அடிக்கும் பந்துகளை மட்டும் மிட் ஆன் மற்றும் கவர் திசைகளில் மட்டுமே தூக்கி அடித்தனர். இதனால் நல்ல பலனும் கிடைத்தது. ஸ்டார்க்கின் பவுலிங்கில் சற்று நிதானம் காட்டிவிட்டு, மற்ற பவுலர்களின் ஓவர்களில் மட்டும் அதிரடி காட்டினர். இதனால் முதல் விக்கெட்டிற்கு 65 ரன்களை சேர்த்தனர்.

கவாஸ்கரின் அட்வைஸ்

கவாஸ்கரின் அட்வைஸ்

இதே அறிவுரையை தான் சுனில் கவாஸ்கரும் கூறியிருந்தார். அதில், மிட்செல் ஸ்டார்க் இருபுறமும் பந்தை திருப்பக்கூடிய திறமை கொண்டவர். அதிவேகமாக வீசும் போதும் கூட நோ பால் போடவில்லை என்றால் அவர் அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார் என்று அர்த்தம். அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து அமைதியாக இருங்கள். வேறு பவுலர்களை மட்டும் அடியுங்கள் என கவாஸ்கர் அட்வைஸ் கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே ஓப்பனிங் ஜோடி செய்துவிட்டனர்.

Story first published: Wednesday, March 22, 2023, 20:04 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+