Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தின் பிரம்மாண்ட டி20 ரெக்கார்டை உடைத்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்.. கோலி சாதனை சமன்!

லாகூர்: 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாஹிப்சாதா ஃபர்ஹான், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சத சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்து அசத்தியுள்ளார்.

லாகூரில் நடைபெற்ற பிஎஸ்எல் 11வது சீசனின் 8வது லீக் போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மென் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மாஸ் சதகத் 26 பந்துகளில் 62 ரன்களும், ஷர்ஜீல் கான் 26 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.

Rohit Sharma s T20 Century Record broken by Sahibzada Farhan and also Equals Virat Kohli record

இதனையடுத்து 226 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. பவர்பிளேயில் இந்த ஜோடி 83 ரன்களை விளாசியது. ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுபுறம் தனி ஆளாக நிலைத்து நின்று ஆடிய ஃபர்ஹான் அபாரமாக சதம் விளாசினார். 19வது ஓவரில் சிக்ஸர் அடித்து ஃபர்ஹான் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் முல்தான் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இது பிஎஸ்எல் வரலாற்றில் 5வது மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் ஆகும்.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சாஹிப்சாதா ஃபர்ஹான் டி20 கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகள் அனைத்திலும் சேர்த்து 8 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும் 9 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரூசோ ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

டி20 வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11, டேவிட் வார்னர் 10 சதங்களுடன் உள்ளனர். ஃபர்ஹான் தனது 9வது சதத்தை வெறும் 160 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். 127 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய கெய்லுக்கு அடுத்தபடியாக குறைந்த இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் அடித்த 2வது அதிவேக வீரர் என்ற பெருமையையும் ஃபர்ஹான் பெற்றுள்ளார். வேறு எந்த வீரரும் 200 இன்னிங்ஸ்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 3, 2026, 8:37 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+