Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் நிறைய இருக்கு... காத்திருங்க... ஹின்ட் கொடுத்த ஹிட்மேன்!

மும்பை : தன்னுடைய பிட்னஸ் டெஸ்ட்டை என்சிஏவில் வெற்றிகரமாக முடித்துள்ள ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது மூன்றாவது இரட்டை சதத்தை கடந்த 2017ல் நேற்றைய தினம் பூர்த்தி செய்ததையொட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ரோகித் சர்மா, இன்னும் நிறைய வரவிருக்கு என்று சிரிப்பு எமோஜியுடன் கமெண்ட் செய்துள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம்

பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம்

குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்றிருந்தார். மேலும் அவர் தனது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

'செக்' வைத்த பிசிசிஐ

'செக்' வைத்த பிசிசிஐ

இந்நிலையில் கடந்த 11ம் தேதி அவருக்கு என்சிஏவில் எடுக்கப்பட்ட சோதனையில் அவர் தேறியுள்ளார். இதையொட்டி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு, அங்கு குவாரன்டைனில் அவர் ஈடுபட உள்ளார். ஆனால் இந்த குவாரன்டைனை அடுத்து அவர் பரிசோதிக்கப்பட்டு அதன்பிறகே அவர் போட்டிகளில் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் பாராட்டு

பல்வேறு தரப்பினரும் பாராட்டு

இந்நிலையில் நேற்றைய தினம் கடந்த 2017ல் அதே நாளில் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய மூன்றாவது இரட்டை சதத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். ஸ்டார் ஸ்போர்ட்சும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தது.

பதிலளித்த ஹிட்மேன்

பதிலளித்த ஹிட்மேன்

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள ரோகித் சர்மா, இன்னும் அதிகமாக வரவுள்ளது என்று சிரிப்பு எமோஜியுடன் பதிலளித்துள்ளார். இது அவர் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது குறித்து ரசிகர்களுக்கு கொடுத்துள்ள குறிப்பாகவே பார்க்கப்படுகிறது.

ரோகித் 3 இரட்டை சதம்

ரோகித் 3 இரட்டை சதம்

3 ஆண்டுகளுக்கு முன்பு நேற்றைய தினம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தன்னுடைய 3வது இரட்டை சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார். இதுவரை சர்வதேச அளவில் 8 இரட்டைச்சதங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 இரட்டை சதங்களை ரோகித் சர்மாவே எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 14, 2020, 13:22 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+