
இடம் காலியாக இருக்கு
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, சூரியகுமார் நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று அவருக்கு கண்டிப்பாக தெரியும். ஸ்ரேயாஸ் ஐயர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்று எங்களுக்கு தெரியாது. இதனால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. இதனால் தான் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாடுகிறார்.வெள்ளை நிற பந்தில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடுவார் என்று நாம் அனைவருக்குமே தெரியும்.

வாய்ப்பு கிடைக்குமா?
ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாடக் கூடிய திறமை இருக்கிறது. நான் ஏற்கனவே நிறைய முறை கூறிவிட்டேன். திறமையான வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பது சூரியகுமார் யாதவும் தெரிந்து கொள்ள வேண்டும். டி20 யை விட இது கொஞ்சம் நீண்ட போட்டியாகும்.
சூரியகுமார் யாதவ் மனதளவில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரி ஆட்டமிழப்பு
எந்த ஒரு வீரரும் எனக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று யோசிக்க கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வருகிறார். பந்து அவரை நோக்கி வரும்போது சூரியகுமார் யாதவ் கொஞ்சம் அசௌகரியமாக உணர்கிறார். இந்திய அணி தற்போது பும்ரா இல்லாமலேயே கடந்த எட்டு மாதங்களாக விளையாடி வருகிறது. பும்ரா இல்லாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் பழகி விட்டோம். பும்ரா போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

பார்ட்னர்ஷிப் தேவை
எனினும் எங்களுடைய திறமை வாய்ந்த பந்துவீச்சாளராக சிராஜ், சமி ஆகியோர் இருக்கிறார்கள். உம்ரான் மாலிக் மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை. முதலில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்.
அப்போது தான் நாம் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











